செவ்வாய், 12 மார்ச், 2019

சத்துணவில் ஒரு மாணவருக்குச் செலவிடப்படும் தொகை எவ்வளவு? ஆர்.டி.ஐ. அதிர்ச்சி

சத்துணவுvikatan.com - கு.ஆனந்தராஜ் : அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்விகளைக் கேட்டிருந்தோம். அதன்படி கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மற்றும் கிடைத்த பதில்களின் விரவங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1. மதிய சத்துணவில் சாப்பிடும் ஒரு மாணவருக்கு ஒதுக்கப்படும் நிதி விவரத்தைத் தரவும் : 
சத்துணவில் சாப்பிடும் ஒரு மாணவருக்கு: பருப்பு உணவுக்கு ரூ.1.40 (Upper Primary) மற்றும் ரூ.1.30 (Primary)
பருப்பு அல்லாத உணவுக்கு ரூ.1.80  (Upper Primary)  மற்றும் ரூ.1.70 (Primary)
உருளைக்கிழங்கு சாப்பிடும் நாள் ஒன்றுக்கு (வருடத்துக்கு 44 நாள்கள்) : ரூ.0.40 (Upper Primary)
வாழைப்பழம் சாப்பிடும் நாள் ஒன்றுக்கு (முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு மட்டும் வாழைப்பழம் வழங்கப்படுகிறது) : ரூ.1.25 (Upper Primary)
2. சத்துணவு சாப்பிடும் மாணவர் ஒருவர் விடுமுறை எடுத்தால், அவருக்கு என ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு வரவு வைக்கப்படும் அல்லது மீதமாகும் உணவு என்ன செய்யப்படுகிறது என்ற விவரத்தைத் தரவும் : 
பள்ளி வேலை நாள்களில் பள்ளிக்கு வந்த உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே உணவுப் பொருள்கள் எடுக்கப்பட்டு உணவு தயாரிக்கப்படுகிறது.
பயனடையும் மாணவர் ஒருவர் விடுமுறை எடுத்தால், அவருக்கென ஒதுக்கப்படும் நிதியானது சம்பந்தப்பட்ட பள்ளி சத்துணவு அமைப்பாளரின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே உணவு வழங்கப்படும்.
சத்துணவு
3. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சமைக்கப்படும் உணவுப் பட்டியலைத் தரவும் : 
முதல் மற்றும் மூன்றாவது வாரம்:
திங்கள் – வெஜிடபுள் பிரியாணி மற்றும் மிளகு முட்டை
செவ்வாய் – கொண்டைக்கடலை புலாவ் மற்றும் தக்காளி முட்டை மசாலா
புதன் – தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டை
வியாழன் – சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை
வெள்ளி – கீரை சாதம் / கறிவேப்பிலை சாதம் மற்றும் முட்டை மசாலா, வறுத்த உருளைக்கிழங்கு
இரண்டாவது மற்றும் நான்காவது வாரம்:
திங்கள் – பிசிபேலாபாத மற்றும் தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் – மீல்மேக்கர் பிரியாணி மற்றும் காய்கறிகள் சாதம், மிளகு முட்டை
புதன் – புளி சாதம் மற்றும் தக்காளி முட்டை மசலா
வியாழன் – எலுமிச்சை சாதம் மற்றும் சுண்டல், தக்காளி முட்டை மசாலா
வெள்ளி – சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு
மதிய உணவு
4. சத்துணவில் எந்தெந்த நாள்கள் முட்டை வழங்கப்படுகின்றன மற்றும் முட்டை சாப்பிடும் மாணவர்களின் விவரங்களைத் தரவும் :
பள்ளி வேலை நாள்களில் திங்கள் முதல் வெள்ளி வரை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் முட்டை வழங்கப்படுகிறது.
5. பள்ளிகளில் தினந்தோறும் சமைக்கப்படும் உணவின் தரம் முறையாகப் பரிசோதிக்கப்படுகிறதா என்ற விவரங்களைத் தரவும் :
பள்ளிகளில் சமைக்கப்படும் உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்காக வைக்கப்படுகிறது.
6. சத்துணவின் தரம், சமையலறை மற்றும் சமையல்காரர்களின் சுகாதார செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரியின் ஆய்வுப் பதிவேடு விவரத்தைத் தரவும் :
ஆய்வுப் பதிவேடுகளின் நகல் பெற அரசு விதிமுறைகளின்படி தொகை செலுத்தி விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
7. சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய சிறப்பு கண்காணிப்பு ஏதாவது மேற்கொள்ளப்படுகிறதெனில் அதன் விவரங்களைத் தரவும்:
குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி அவ்வப்போது மருத்துவத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.
vikatan.com

கருத்துகள் இல்லை: