ஞாயிறு, 10 மார்ச், 2019

எத்தியோப்பியாவில் விமான விபத்து: 157 பேர் உயிரிழப்பு .. 4 இந்தியர்கள் உட்பட


எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள்  மாலைமலர் : எத்தியோப்பியா நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள் அடிஸ் அபாபா: எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் சென்றவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்னும் விபரத்தை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: