திங்கள், 11 மார்ச், 2019

ராமதாஸ் வீட்டு பார்ட்டிக்கு பின்னரே காடுவெட்டி குரு உடல்நிலை சரியில்லாமல் போனது!’ - காடுவெட்டி குரு குடும்பம்

காடுவெட்டி குருவின் குடும்பம்குரு குடும்பம்விகடன் - கலிலுல்லா.ச : `அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்கு, காடுவெட்டி குரு தடையாக இருப்பார் என எண்ணி, அவரைக் கொலை செய்துவிட்டனர்' என குருவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் காடு வெட்டி குருவின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர் காடுவெட்டி குரு சகோதரி மீனாட்சி, மகன் கனலரசன், தாய் ஆகியோர் கூட்டாக பேசினர்.
`காடுவெட்டி குருவின் இறப்பு இயற்கையானது அல்ல. அவரைக் கொன்று விட்டனர். இது ஒரு மருத்துவ கொலை.
2011-ம் ஆண்டு நடந்த பார்ட்டியில் ராமதாஸ் வீட்டிற்குச் சென்று உணவருந்திய பின்பு இருந்து தான் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. நாங்கள் படும் கஷ்டம் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. எங்களை அனைவரையும் அடித்து,  ஊரில் இருக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். அன்புமணியின் வளர்ச்சிக்கு என் அப்பா தடையாக இருப்பதாகக் கருதினார்கள். அவருக்கு எதற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் இறந்துவிடுவார் என்று கூறி சிகிச்சை அளிக்காமல் சாகடித்துவிட்டனர்.

மாற்றம், முன்னேற்றம் என அன்புமணி பேசிவிட்டு, பணத்திற்காகப் பேரம் போய் விட்டார். பா.ம.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
எங்களது சமுதாயத்திற்கு என எந்த ஒரு கோரிக்கையும் இல்லை. பா.ம.க கட்சியில் உள்ளவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல், அ.தி.மு.கவுடன் 8 0வகை உணவு பரிமாறி உண்கின்றனர்.
பா.ம.க தலைமைக்கு வன்னிய சமுதாயமே பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது. 35 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்த குரு, கடைசிக் காலத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்தார். சொந்த ஊரிலேயே இருக்கக் கூடாது என எங்களை மிரட்டுகின்றனர். எங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாங்கள் வாழ்வதா, சாவதா என்றே தெரியவில்லை'' எனக் கண்ணீர் மல்கப் பேசினர்.

கருத்துகள் இல்லை: