செவ்வாய், 12 மார்ச், 2019

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைதாகி விடுதலை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைதாகி விடுதலை பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தினத்தந்தி : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அரக்கர்களை தப்பவிடாமல் அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி திமுக போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே உள்ளது. பெண்கள் ஆணையம் தலையிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முழங்கப்பட்டது.< போராட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலைகுனிய  செய்துள்ளது. 7 ஆண்டுகளாக ஒரு நெட்வொர்க் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது ஆனால் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இவ்வளவு பெரிய கொடூரச் சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவர முன்வந்த மாணவிக்கு தலை வணங்குகிறேன். காவல்துறையினர் யாருக்கு வேலை செய்கிறார்கள்...? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவிற்கு காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர் என விமர்சனம் செய்தார். இறுதியில் போராட்டம் நடத்திய கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் காவல்துறை கைது செய்தது

கருத்துகள் இல்லை: