செவ்வாய், 12 மார்ச், 2019

பொள்ளாச்சி ஜெயராமன் : தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு திமுகவினர் களங்கம் ஏற்படுத்துகின்றனர்…

Interpol also inquire; Pollachi jeyaraman tension tamil.oneindia.com - alagesan : சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை இண்டர்போல் கூட விசாரிக்கட்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், தங்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
 அரசியல் லாபத்திற்காக பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வைத்து திமுக குற்றம் சாட்டுகிறது; தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறு பரப்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்கம் முதலே ஆதரவு கொடுத்து வருவதாகக் கூறிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக நாடகம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம்.. "மிருகங்களுக்கு" உச்சபட்ச தண்டனை வழங்குக- சத்யராஜ் ஆவேசம்
25 நாட்களுக்கு முன்பு இல்லாத அக்கறை, தேர்தல் அறிவித்த பின்பு திடீரென திமுகவிற்கு வந்துள்ளதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
இதற்கிடையே, நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: