வியாழன், 29 டிசம்பர், 2016

முதல்வர் ஆகிறார் சசிகலா..! நடராஜன் நிழல் முதல்வர்..! மன்னார்குடி பேரரசு உருவாகிவிட்டது ! நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் ..மாதம் மும்மாரி....அக்பர் பேரரசு..குப்த பேரரசு ..போல தமிழ் நாட்டில் மன்னார் பேரரசு..உருவாகி
விட்டது. இனி மீதி இருக்கும் நான்கு வருடங்கள் அவர்கள் வைத்தது தான் சட்டம்.
ஆமாம். ஒரு  வழியாக தடைகள் தாண்டி சசிகலா பொதுச்செயலாளர் ஆகி விட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் சிங்கங்கள் அமர்ந்த பொதுச்செயலாளர் நாற்காலியில் சசிகலாவும் அமர வேண்டும்  என்பது காலத்தின் கட்டாயம் போல.
சசிகலா குடும்ப உறவுகள் அடுத்ததாக அவரை முதல்வர் நாற்காலியிலும் அமர வைத்து விட்டுதான் ஓய்வார்கள். பன்னீருக்கு பன்னீர் தெளித்து வாழ்த்த அவர்களுக்கு தலை எழுத்தா..?
எண்ணிப் பத்தே நாட்கள். அவசரமாக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் கூடும். அதில் ஒரு மனதாக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள்.
அப்படி சசி முதல்வர் ஆனால் கணவர் நடராஜன் நிழல் முதல்வராக கார்டனில் அமர்ந்து கொள்வார். மன்னார்குடி சொந்தங்கள் அனைவரும் அதிகார மையமாக இருக்கும்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். அதன் பின் மீண்டும் தேர்தல் வரும் அதிமுக என்கிற ஒரு நாற்பது வருட கட்சி ஒரு முடிவிற்கு வரும்..!
அதைக்கூட விட்டுவிடுவோம் இந்த நான்கு வருடங்களில் தமிழ் நாடு என்ன ஆகும் நண்பர்களே.. லைவ்டே

கருத்துகள் இல்லை: