சனி, 31 டிசம்பர், 2016

திருமாவளவன் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்தார் ! வைகோவின் புரோக்கர் தொழிலுக்கு போட்டி?

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவைப் போய் அண்ணண் திருமாவளவன் சந்தித்தது பல்வேறு உள்நோக்கங்கள் கொண்டதாக இருக்கலாம், பெண்ணுரிமை அது இது என்று சொல்வதெல்லாம் ஒரு முட்டுக்கொடுப்பு என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க.வின் மீது இருக்கிற காழ்ப்புணர்வால் அதைச் செய்திருக்கலாம், அதிகார பகிர்வு என்கிற திருமாவளவனின் கோட்பாட்டுக்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும், தேர்தல் காலங்களில் திமுக அவர்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்கிற கோபமும் அவருக்கு உண்டு.
ஆகவே, இப்படியான சில "செக் மேட்" களின் மூலமாக திமுகவை வெறுப்பேற்றவோ, தொடர்ந்து தங்கள் கட்சியின் மீது ஒரு "டிமாண்ட்" உருவாக்கவோ அவர் அப்படிச் செய்திருக்கக் கூடும், கூடவே மகா அடிமைச் சமூகமும், இந்துத்துவர்களின் பகடைக்காயுமான திரு.ரவிக்குமார் பவ்யமாக அமர்ந்து இருக்கும் காட்சி வேறு கிலியை உண்டாக்குகிறது.

சசிகலாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து முதல் அடிமை வணக்கத்தை வைத்து வந்ததைப் போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தச் சந்திப்பு, அவரை கட்சி அலுவலகத்தில் சந்தித்திருக்கலாம், ஊடகங்களின் வழியாக வாழ்த்துச் சொல்லி இருக்கலாம், அவருடைய அடுத்த கட்ட அரசியல் சமூக நகர்வுகளை நன்கு அவதானித்துப் பின்னர் நிதானமாகச் சென்று சந்தித்திருக்கலாம்.
ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகங்கள் (குறிப்பாக தேவேந்திரர்கள்) கடைபிடிக்கிற ஒரு அரசியல் சுயமரியாதையை, மிடுக்கை விட்டு விட்டு தான்தோன்றியாக இப்படிப் பல படிகள் ஏறும் போது நமக்கு வாய்த்த அடிமைகள் இன்னும் கொஞ்சம் சிறந்த அடிமைகளாக இருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
# # # திருமாவளவன் - சசிகலா சந்திப்பு, அவசரக்குடுக்கையும், அடிமைத்தனமும் # # #  முகநூல் பதிவு   அறிவழகன் கைவல்யம்

கருத்துகள் இல்லை: