வியாழன், 29 டிசம்பர், 2016

வைகோவை கண்டால் விரட்டி அடியுங்கள்!” தொண்டர்களுக்கு விஜயகாந்த் உத்தரவு?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம் விஜயகாந்த்.
வைகோவை இனி ஒருபோதும் மக்கள் நல கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடம் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மீண்டும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய விரும்பதாகவும் கூறியுள்ளாராம். அதே போல் வைகோ தன்னைப் பற்றியோ தேமுதிக பற்றியோ பொது இடங்களில் விமர்சித்தால் அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் கடுமையாக அடி கொடுக்கப்படும் என்றும் தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது தவறு என வைகோ பேட்டியளித்தது தான் விஜயகாந்தின் இந்த கோபத்திற்கு காரணமாம். லைவ்டே

கருத்துகள் இல்லை: