சனி, 31 டிசம்பர், 2016

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை: மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு!

www.thesundayleader.lk/2013/09/08/lanka-should-ignore-tamil-nadu-dr-subramanian-swamy/
Q. You have singlehandedly done more for Sri Lanka than our whole foreign ministry put together, in relation to South India. So what advice would you give our foreign ministry in dealing with South India?
A. Well, just ignore Tamil Nadu; it’s only a matter of time. I go to Tamil Nadu and speak against the LTTE. Today I am in Sri Lanka, and it will be published in Tamil Nadu that I am with the Sri Lankan Army, but it is just a handful that are creating all this fuss. The vast majority of Tamils want good relations with Sri Lanka. It’s only the present government which relies on the clandestine support of the DMK and Sonia Gandhi. In May 2014 there will be a new government and when that happens everything will be fine.
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை ஆக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட‌ அறிக்கை வருமாறு:
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து; அவர்களிடமிருந்து படகுகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 இழுவைப் படகுகளையும், இதர சாதனங்களையும் நாட்டுடமையாக்கி விட்டதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரா அறிவித்துள்ளார். இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  சுப்பிரமணியம் சாமி மகிந்த ராஜபக்ஷாவிடம் படகுகளை இலங்கை அரசு திருப்பி கொடுக்க கூடாது என்று ஆலோசனை வழங்கினார் .இத அவரே ரொம்ப பெருமையா வேற சொல்லியுள்ளார் .. சு.சாமியை ஏன் தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யகூடாது?

இலங்கை அரசின் இதுபோன்ற செயல்கள் தொடர, மோடி தலைமையிலான மத்திய அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று பாஜக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப் படாமலேயே உள்ளன. பாம்பனில் 2014 ஜனவரி மாதம் பாஜக நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தின் போது அப்போதைய பா.ஜ.க நாடாளுமன்றக் குழு தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் ”மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத் துறை அமைச்சகம் உருவாக்கப்படும், கச்சத் தீவு மீட்கப்படும், மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்”, என வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து 2014 ஏப்ரலில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு. நரேந்திர மோடி அவர்கள், “தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை எடுப்போம். கடலில் மீன்கள் எங்கு அதிகம் கிடைக்கும்? நமது எல்லை எங்கு முடிகிறது? என்பன பற்றிய விவரங்களை மீனவர்கள் அறிய வழிவகுக்கப்படும். குறிப்பாக, மீனவர்களுக்கு செல்போன் மூலம் உரிய தகவல்களைத் தரமுடியும். அதன்மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மீனவர்களுக்கு மாற்றுத் தொழில்கள் அறிமுகப்படுத்துவோம்” என்றெல்லாம் அறிவித்தார். திரு.நரேந்திர மோடியின் ஆட்சிக் காலம் பாதியளவு முடிவடைந்த போதினும் மீனவர்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தற்போதைய அறிவிப்பு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மீனவ அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திரு. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு விஷயங்களில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கியுள்ளதும் மோடி அரசின் தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல் இலங்கை அரசு அறிவிப்பை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.thetimestamil

கருத்துகள் இல்லை: