வெள்ளி, 30 டிசம்பர், 2016

இயக்குனர் பா.ரஞ்சித் : இந்தியா ஒரு வெட்கம் கெட்டநாடு.. மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நாடு

இந்தியா வெட்கங்கெட்ட நாடு என இயக்குனர் பா_ரஞ்சித் பேச்சு இந்தியாவில் கலாச்சார பெருமையை வாய் கிழிய பேசுவார்கள் ஆனால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை பற்றி யாரும் பேச மாட்டார்கள் ஏன் இந்த ஊடகங்கள் கூட பேசுவதில்லை நாம் தான் பேசுகிறோம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்று கூடும் நீங்கள் ஏன் நாங்கள் இனி இந்த தொழிலை செய்ய மாட்டோம் என கூறி ஒன்று சேர மறுக்குறீர்கள் நாம் வயிற்றுக்காக தான் இந்த தொழிலை செய்கிறோம் இதை செய்வதை விட செத்து போவதே மேல் எனவும் இந்தியாவில் மாட்டுக்கு பூ வைத்து பூஜை செய்வார்கள் ஆனால் சக மனிதனை மாட்டை விட கேவலமாக நடத்துவார்கள் இந்தியாவில் நீதி எதிர் பார்க்க முடியாது என ஆவேசமாக பேசினார் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: