வியாழன், 29 டிசம்பர், 2016

சேகர் ரெட்டியின் நெட்வேர்க் ... ஜெயலலிதா +சசிகலா +பன்னீர்செல்வம் போன்ற துறைசார் அமைச்சர்கள் +ராம் மோகனராம் +பிரேம்ரெட்டி +ராமச்சந்திரன் ......

சேகர் ரெட்டி கொடுத்த கமிஷன், இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதில் 15 சதவிகிதம் போயஸ் கார்டனுக்கும், 5 சதவிகிதம் துறை அமைச்சர்களுக்கும், 5 சதவிகிதம் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கமிஷனாகக் கொடுத்துள்ளார். 
 முதலமைச்சர் ஓ.பி.எஸ், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராமச்சந்திரன், அமலநாதன், ரத்தினம், ஆடிட்டர் பிரேம்குமார், வனத்துறை கல்யாண சுந்தரம் வகையறாக்கள்

சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1
தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை போட்டிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர். இந்த சோதனையின் ஆணிவேர் சேகர் ரெட்டிதான். அவர் வீட்டில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் ராம மோகன ராவ் வளைக்கப்பட்டார். ரெட்டியும் ராவும் மட்டும் கூட்டணி போட்டு நடத்திய விஷயம் இல்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது.

அந்த நெட்வொர்க் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பக்கங்களில் பார்ப்போம். முதலில் சேகர் ரெட்டி! போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். அந்த சசிபெயர்ச்சிக்குப் பிறகு, கார்டனில் உருவான வெற்றிடத்தை நிரப்ப பலத்த போட்டி ஏற்பட்டது. புதிய நெட்வொர்க்குகள் புற்றீசல்கள் போல உருவாயின. கார்டனின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட முடியாமல், அவற்றில் சில இடையில் அறுந்துபோயின. கார்டன் ரூல்ஸ்களை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்த சில நெட்வொர்க்குகள், குட் புக்கில் இடம்பிடித்தன. கான்ட்ராக்ட், கமிஷன், அதிகாரம் என்று அந்த நெட்வொர்க்குகள் கொடிகட்டிப் பறந்தன. 3 மாதங்களுக்குப் பிறகு சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார்.

புதிதாக உருவாகி இருந்த இந்த நெட்வொர்க்குகளின் பயன்களும் பலன்களும் அவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனால், அவற்றை சசிகலாவும் தொந்தரவு செய்யவில்லை.
அந்த நெட்வொர்க்தான் முதலமைச்சர் ஓ.பி.எஸ், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராமச்சந்திரன், அமலநாதன், ரத்தினம், ஆடிட்டர் பிரேம்குமார், வனத்துறை கல்யாண சுந்தரம் வகையறாக்கள். சேகர் ரெட்டி சேகர் ரெட்டி என்ற பாத்திரம், தமிழக அரசு அதிகார மையத்துக்கு 2011-க்குப் பிறகே மிக நெருக்கமானது. அதற்கு முன்புவரை, மணல் கான்ட்ராக்டுகளில் கொடிகட்டிப் பறந்தவர்கள், படிக்காசு, ஆறுமுகச்சாமி வகையறாக்கள். அவர்களிடம் பிசினஸ் செய்ய முடியாதவர்கள், அவர்களைப் பகைத்துக்கொண்டவர்கள், அவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். ஆனால், அவர்களால் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு எதிராக ஒரு பலமான நெட்வொர்க்கை ஏற்படுத்த முடியாமல் இருந்தது.

அந்த நேரத்தில் களத்துக்கு வந்தவர்தான் சேகர் ரெட்டி. இவரின் நெட்வொர்க் இரும்புக் கோட்டையாக அமைய அஸ்திவாரம் போட்டவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ‘மணல்’ ராமச்சந்திரன்தான். அவருடைய அறிமுகம் கிடைப்பதற்கு முன்புவரை, சேகர் ரெட்டி, சாதாரண கவுன்சிலர் லெவல் கான்ட்ராக்ட்டுகளை மட்டுமே எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். மணல் ராமச்சந்திரன், ஒயின் ஷாப் நடத்திக் கொண்டிருந்தவர்.
ஆனால், டாஸ்மாக் வந்தபிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் அடியெடுத்து வைத்தார்.
அதோடு, ஜல்லி சப்ளை செய்யும் கிரஷர்களையும் ஆரம்பித்தார். அதே நேரத்தில், ராமச்சந்திரனின் உறவினர் ரத்தினம் என்பவர் திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திக்கொண்டிருந்தார். ராமச்சந்திரன் அந்த நேரத்தில், அன்றைய எம்.எல்.ஏ-வும், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான விஜய பாஸ்கருக்கு நெருக்கமானார். காரணம், விஜய பாஸ்கருக்கும் ஜல்லி கிரஷர்கள் இருந்தன. அதனால், அவர்கள் நெருக்கமானார்கள். இந்த டீமுடன் சேகர் ரெட்டி இணைந்தார்.
சேகர் ரெட்டிக்கு ஆரம்ப காலத்தில் வருமானவரித் தாக்கல் செய்வதற்கான வேலைகளில் உதவியவர் ஆடிட்டர் பிரேம். இந்த பிரேம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சின்ன வயதில் இருந்தே நண்பர். இந்த லிங்க் மூலம் சேகர் ரெட்டி விஜயபாஸ்கருக்கு நெருக்கமானார். அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டியை மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் நெருங்கினார்கள். நெட்வொர்க் பலமானது. விஜயபாஸ்கர் மூலம், இந்த நெட்வொர்க் அரசாங்கத்துக்குள் அடி எடுத்து வைத்தது.

அந்தக் காலகட்டத்தில் பொதுப்பணித் துறையை கையில் வைத்திருந்தவர் ஓ.பி.எஸ். நெடுஞ்சாலைத் துறை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது. சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சேகர் ரெட்டிக்கு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டுகள் கிடைத்தன. கமிஷன் தொகை, கச்சிதமாக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கார்டனுக்குச் சென்றதால், அசைக்க முடியாத சக்தியாக உருவானார் சேகர் ரெட்டி. விஜயபாஸ்கரும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷும் நண்பர்கள். அந்த வகையில் வெங்கடேஷ் மூலம் சேகர் ரெட்டி கார்டனுக்குள்ளும் திருப்பதி லட்டுகளை அனுப்ப ஆரம்பித்தார்.

அதன்பிறகு, சேகர் ரெட்டி ஓகோவென்று வளர ஆரம்பித்தார். ஆனாலும், அவருக்கு அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளின் நட்புதான் முக்கியம். அரசியல்வாதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதிகாரிகள் அப்படி அல்ல...! மணல் குவாரிகளில் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு பதிலாக சேகர் ரெட்டியின் கொடி பறக்க ஆரம்பித்தது. அதற்கு பிரதி உபகாரமாக ராம மோகன ராவ் மகள் திருமணத்தை சேகர் ரெட்டி மிகப் பிரமாண்டமாக நடத்திவைத்தார்.

இந்தக் கூட்டணியின் புதிய கண்டுபிடிப்புதான், டெண்டர் கேட்கவே 10 சதவிகித கமிஷன் என்பது. அதுதான் பின்னாளில் வளர்ந்து, 30 சதவிகித கமிஷனாக இன்று மாறி இருக்கிறது.

 சேகர் ரெட்டியின் நிறுவனங்கள் ! சேகர் ரெட்டிக்குச் சொந்தமான நிறுவனம் எஸ்.ஆர் இன்புரோ பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்துக்கு, கடந்த மூன்றாண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறை, நெஞ்சாலைத் துறைகள் இந்த ஒப்பந்தங்களை வழங்கி உள்ளன.
இதற்காக சேகர் ரெட்டி கொடுத்த கமிஷன், இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதில் 15 சதவிகிதம் போயஸ் கார்டனுக்கும், 5 சதவிகிதம் துறை அமைச்சர்களுக்கும், 5 சதவிகிதம் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கமிஷனாகக் கொடுத்துள்ளார். தமிழக அரசு விதிகள்படி, இப்படிப்பட்ட கான்ட்ராக்ட்டுகளை எடுக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளைக் கடந்து இருக்க வேண்டும். ஆனால், சேகர் ரெட்டியின் நிறுவனம், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில்தான் தொடங்கப்பட்டு உள்ளது.

ஆரணி - படவீடு நெடுஞ்சாலை பழுதுபார்ப்பு கான்ட்ராக்ட், சென்னையில் தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட நகர சாலைகளைப் பழுதுபார்க்கும் கான்ட்ராக்ட், காட்பாடி சப்டிவிஷன் கான்ட்ராக்ட், சிதம்பரம் தாலுகாவில் கொள்ளிடம் ஆறு கரைகளை சீரமைக்கும் கான்ட்ராக்ட், காஞ்சிபுரத்தில் செய்யூர் - கிள்ளியூர் கான்ட்ராக்ட் போன்றவை சேகர் ரெட்டியின் நிறுவனங்கள் எடுத்து செய்த வேலைகள்தான்.

இந்த நெட்வொர்க்குதான் இப்போது அம்பலம் ஆகி உள்ளது. -ஜோ.ஸ்டாலின்  விகடன் <

கருத்துகள் இல்லை: