வியாழன், 29 டிசம்பர், 2016

பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்

APSC
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ="பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்">
Tughlaq modi1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று செப்டம்பர் 8ஆம் தேதி அன்று மோடி அறிவித்த பின்னர் தெலுங்கானா பகுதியை சேர்ந்த 55 வயதான பெண் விவசாயியான கே. வினோதா தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னுடைய நிலத்தை விற்று கிடைத்த 56 லட்சம் ரொக்க பணத்தை உயர் மதிப்பு நோட்டுகளாய் (பழைய 1000 மற்று ம்  500 ரூபாய்) வைத்திருந்தார். மோடி அறிவிப்பினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு சம்பவத்தில், ஒடிசாவின் சம்பல்பூரை சேர்ந்த பெற்றோரிடம் இருந்த பழைய 500 நோட்டை ஆட்டோ ஓட்டுனர் பெற மறுத்ததால், தங்களுடைய இரண்டு வயது குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் பறிக்கொடுத்தனர். கடந்த ஒரு மாதத்தில் மோடியின் செல்லா நோட்டு நடவடிக்கையால் 12 வங்கி ஊழியர்கள் உட்பட90 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இதுபோல இந்தியா முழுவதும் சொல்லப்படாத கதைகள் ஏராளம்.நான்கு மணி நேரத்தில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாக்காசாகிய நவீன துக்ளக் மோடிவெறும் 4 மணி நேரத்தில், செப்டம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் பணப்புழக்கத்தில் இருந்த 86 விழுக்காடு பழைய 500, 1000 நோட்டுக்கள் சட்டரீதியான தகுதியை இழந்து வெற்று காகிதங்களாய் மாறியது. மோடியின் சொந்த வார்த்தைகளில், சொன்னால் இந்த ‘பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கை’ கள்ள நோட்டு, பயங்கரவாதம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு ஆகும். ஆனால் இந்த பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் அதற்காக சொல்லப்பட்ட காரணங்க்களுக்கும் இடையே பல மைல்களுக்கு இடைவெளி இருப்பதை ஆய்வுகள் தெளிவாக காண்பிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் கள்ள நோட்டின் அளவு வெறும் 0.0007% மட்டுமே. அதாவது புழக்கத்தில் உள்ள 16.41 லட்சம் கோடி ரூபாயில் வெரும் 400 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டாகும். மேலும் 2015-16 நிதி ஆண்டில் பிடிபட்ட கருப்பு பணத்தில் வெறும் 6% மட்டுமே ரொக்க பணமாக பிடிபட்டது என வருமான வரித்துறை தரவு காட்டுகிறது. எனவே, கறுப்பு பண ஒழிப்பிற்காகவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று மோடி சொல்லவது பச்சை பொய். பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன. ஒரு மாதத்திற்கு பிறகும் கூட கருப்பு பணம் பதுக்கியவர்கள் யாரும் அரசாங்கத்தால் கைது செய்யப்படவில்லை. ஆனால் மோடியோ மற்றும் அவரின் அடிமைகளோ 50 நாட்கள் காத்திருங்கள் ‘Acche din’ (நல்ல நாள்) வந்து கொண்டு இருக்கிறது என்று சமூக மற்றும் அச்சு ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கடந்த ஒரு மாதமாக மக்களின் சாதாரண வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சில்லறை வணிகர்கள் கடுமையான பாதிக்கப்புக்கு ஆளாகியுள்ளனர். பெட்டி கடைகள், உணவகங்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், மீன் சந்தை மற்றும் பலசரக்குக் கடைகள் தங்களின் வணிகத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களால் ஊதியம் பெற முடியவில்லை; தோல், ஜவுளி மற்றும் பிற சிறு தொழில்கள் மூடும் தருவாயில் உள்ளன; கூட்டுறவு வங்கிகள் மற்றும் முதன்மை விவசாய கடன் சங்கங்கள் போதிய பணமில்லாமல் தேக்க நிலையில் உள்ளன; கட்டுமான தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவிதமும், வேலைவாய்ப்பில் 86 சதவிதமாக இருக்கும் முறைசாரா தொழில் துறை (informal sector) மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு அறிவிக்கப்படாத பொருளாதார அவசரநிலை, உழைக்கும் வெகு மக்களின் மீது மோடியால் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ, தனியார் வங்கிகளோ, மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (NASSCOM), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை (FICCI), பல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்களோ மோடியின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை  வரவேற்கின்றனர். உண்மையான கருப்பு பண முதலைகள் சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை, ஆனால் உழைக்கும் வர்க்கமோ தாங்கள் நேர்மையாக சம்பாதித்த பணத்தை கூட பெறமுடியாமல் தவிக்கின்ற நிலையில் அவர்களுடைய வங்கி கணக்குகள் மோடியால் தணிக்கை செய்யப்படுகின்றன.
இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள், கருப்பு பணம் என்பது வீட்டில் மூட்டையாகவோ அல்லது கட்டிலுக்கு அடியில், தலையணையில் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று உள்ளார்ந்து நம்புகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, கருப்பு பணத்தின் பெரும் பகுதி நிலம், நகை, பங்குகள், அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு என பாதுகாப்பாகவும் பரிவர்த்தனையிலும் உள்ளது. வரி இல்லா சொர்க்கங்கள் (மொரிசியஸ் தீவு, கேமன் தீவு மற்றும் பனாமா) மூலமாக இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் (FDI) பாதி கருப்பு பணம் ஆகும். அரசியல்வாதிகள் (பிஜேபி உறுப்பினர்கள் உட்பட), அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் சட்டவிரோதமாக பில்லியன் கணக்கான டாலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். உலகளாவிய நிதி நாணய அறிக்கைப்படி(Global financial Integraty), பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தவறாக விலை நிர்ணயம் மூலமாக வருடத்திற்கு 34.7 லட்சம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளியில் செல்கிறது.
ஒட்டுமொத்தமாக 350 லட்சம் கோடி ரூபாய் 2004 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் இருந்து வெளியில் சென்றுள்ளது. இந்த கறுப்பு பணம் தான் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), அந்நிய நிறுவன முதலீடுகள் (FII) மற்றும் பங்கேற்பு குறிப்புகள் (Participatory Notes) என்ற பெயரில் வரி இல்லா சொர்க்கங்கள் வாயிலாக இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. கறுப்பு பணம் முதலாளித்துவ அமைப்பின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். மேலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே உள்ள புனித உறவு என்பது கறுப்பு பணத்திற்க்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் அங்கீகாரமும் வழங்குகிறது. இந்திய மக்கள் தொகையில் 10% க்கும் குறைவாக உள்ள கருப்பு பண முதலைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் அறிந்த போதிலும், மோடி சர்க்கார் கருப்பு பண முதலைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் இந்தியா மக்கள் தொகையில் 80% க்கும் உள்ள சாதாரண மக்களை பணம் பரிமாற்ற நிபந்தனைகள் மற்றும் அவர்களின் வங்கி விவரங்களை ஆராய்வது என  இரக்கமற்று தொடர்ந்து சித்திரவதை செய்து வருகிறது மோடி அரசு.
Photo Shop modi
80% மக்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மோடிஜி.
அரசியல் கட்சிகளோ, கம்யூனிஸ்ட்கள் உள்பட, பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்லாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டும் முன்னிறுத்தி மோடியை கண்டிக்கின்றனர். ஆனால், இது கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் கொள்ளையால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து  வங்கிகளை காப்பாற்ற, இந்தியாவின் 80% மக்களின் கடினமாக உழைப்பினால் உருவான சேமிப்பை  கொள்ளையடிப்பதற்க்காக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் ஆகும்.
2016-ம் மார்ச் மாதம் நிலவரப்படி, பொது துறை வங்கிகளால் கொடுக்கப்பட்ட கடன்களில் 9.32% வராக் கடனாக மாறியுள்ளது, அது 2017-ம் மார்ச் மாத்தில்  10.10% ஆக உயரும். இந்த வராக் கடன்களின் தொகை சுமார் 4.76 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியை பாதுகாக்க, அரசு 5 லட்சம் கோடிக்கு அதிகமான பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குள் உட்புகுத்த வேண்டியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது வரை 11.55 லட்சம் கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக (டெபாசிட்) செலுத்தப்பட்டுள்ளது. “பணத்தின் மதிப்பை நீக்குதல்” நடவடிக்கையின் மூலம் பெறப்படுகிற மக்களின் சேமிப்பு பணத்தை கொண்டு, பெருநிறுவனங்களால் சூறையாடப்பட்ட பணம் (வராக் கடன் வடிவில்) ஈடு செய்யப்படுகிறது. மக்கள் தொகையில் 90% இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சேமிப்பு பணத்தை, 10% இருக்கும் தரகு முதலாளிகளின் நலன்களுக்காக சூறையாடப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு “மதிப்புமிக்க உத்தி” பணமில்லா பொருளாதாரம்.(cashless economy) இந்தியாவில் தற்பொழுது பரிவர்த்தணைகளில் 90% ரொக்கப் பணமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அண்மையில் பீகாரில் தனது பொதுக்கூட்ட உரையில், மோடி பணமில்லா பொருளாதாரத்திற்கு மாறுவதை பரிந்துரைத்துள்ளார்.
பண பற்றாக்குறையில் இருந்து மீள்வதற்கு மின் பரிவர்த்தனைக்கு(digital economy) மாற நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்குகிறது. இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்களின் மூலம் ஒருகினைந்த பரிவர்த்தனை படிவம் (Unified Payment Interface – UPI), பரிவர்த்தனை வங்கிகள் (Payment Banks), ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் அமைப்பு, கட்டமைப்பற்ற கூடுதல் சேவை தரவு (USSD), பேடிம் (Paytm) சேவை நிருவனம் மற்றும் பிற மின் பணப்பைகள் (wallets) போன்ற பல்வேறு வங்கி முறைகள் மூலம் செயல்படும் மின் பரிவர்த்தனை ஊக்குவிக்கபடுகிறது. மேலும் பழைய நோட்டுகளை மாற்ற வங்கி கணக்கு கட்டாயமாகும் என நிதி அமைச்சர் கூறுகிறார்.
முறைசாரா துறையில் பணிப்புரியும் தொழிலாளிகளின் வாராந்திர மற்றும் அன்றாட ஊதியத்தை உரிய வங்கி கணக்குகளில் மட்டுமே செலுத்த வேண்டும். “பணத்தின் மதிப்பைக் நீக்குதல்” என்ற பெயரில், மோடி வலுக்கட்டாயமாக அனைவரையும் வங்கிகளின் பிடியில் சிக்க வைத்திருக்கிறார், அதே போல் அனைத்து பணப் பரிமாற்றங்களும் மின் பரிமாற்றங்களாக செய்யப்படும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறார். இதனால் சிறிய பலசரக்குக் கடைகள் / காய்கறி விற்பவர்களின் வணிகம் 50% இழப்பை சந்தித்திருக்கிறது ஆனால் மின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் (supermarkets) இலாபம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மோடி இந்த நடவடிக்கையின் மூலம் சில்லறை வர்த்தக வணிகத்தை அழித்து மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்கள் கிராமப்புறம் வரை தங்களின் தொழிலை விரிவுபடுத்த வழிசெய்திருக்கிறார்.
cashless-paytmகடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன், ஐடியா மற்றும் பேடிம் (Paytm) உட்பட 11 பெரு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை வங்கி (Payment Banks) சேவையை தொடங்கஅனுமதி அளித்தது. நவம்பர் 23 ஆம் தேதி ஏர்டெல் அதன் பரிவர்த்தனை வங்கிக் சேவையை தனது 10000 சேவை மையங்களை கொண்டு சோதனை திட்டமாக ராஜஸ்தானில் தொடங்கியது. இந்த பரிவர்த்தனை வங்கியில் புதிய கணக்கை திறக்க ஆதார் அட்டை போதுமானது. சிறு நகர்ப்புறம் மற்றும் கிராமங்கள் தான் அவர்களின் முக்கிய இலக்கு. பெரும் மோசடி பேர்வழிகளான தொலைதொடர்பு நிருவனங்கள் மக்களின் சேமிப்பு பணத்தை கொள்ளை அடிக்க சட்டபூர்வமான உரிமையை மோடி கொடுத்துள்ளார்.
மோடி தனது இரண்டரை ஆண்டு கால ‘நல்லாட்சியில்’ ஜன் தன் யோஜனா, வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் அரசு சலுகைகளுக்கு கட்டாயம் ஆக்கியது, ஒருகிணைந்த பரிவர்த்தனை படிவம், ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் அமைப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற முயற்சிகளின் மூலம் அனைவரையும் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் மற்றும் மின் பரிவர்த்தைனைக்கு மாறவும் நெருக்கம் கொடுத்து வந்திருக்கிறார். பெருநிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையில் உள்ள புனித உறவு மூலம் இந்த திட்டங்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கொள்கை வகுப்பாளர்கள்(Policy makers) மற்றும் சிந்தனை குழாம் (Think tanks) கலந்து கொண்ட நிதி அயோக் (Niti Aayog) நத்திய கூட்டத்தில் உரையாற்றிய பில் கேட்ஸ்:
‘இந்தியா ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு தன்னை தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்தியா இன்னும் ஏழு ஆண்டுகளில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறும்’ என்றார். அதாவது  ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவில் தொழில்நுட்பத்தை உற்பத்தித் துறையிலும் (இதனால் 2025 இல் 20 கோடி வேலை இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது), நிர்வாகத்தில் டிஜிட்டல் மயத்தையும் (பணமில்லா பொருளாதாரம்) உள்ளடக்கிய நான்காவது தொழில் புரட்சிக்கு(Fourth Industrial revolution) தயாராக இருக்க வேண்டும் என கொள்கை வகுப்பாளர்களுக்கு பில் கேட்ஸ் அறிவுருத்துகிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காளியான மைக்ரோசாப்ட், இந்தியாவில் 5 லட்சம் கிராமங்களில் இணைய வசதி வழங்க இந்திய அரசாங்கத்துடம் ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மோடியின் பணமில்லா பொருளாதாரம் என்பது, ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் உழைக்கும் வர்க்கத்தை நேரடியாக கொள்ளையிடுவதற்காக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகும்.
பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த போதிலும், எதிர்க் கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக பாராளுமன்றத்தில் பெரும் நாடகம் ஆடி வருகின்றனர். மோடி மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் வழக்கம் போல தங்களுடைய பாசிசத் தன்மையை மக்கள் மீதான ஏளனமான உரைகளையும் ஆணவமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றனர். உண்மையில், மோடி பெருநிறுவனங்களின் லாபவெறிக்கு உணவளிக்க மக்களை 50 நாட்கள் பட்டினகிடக்க சொல்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் கவலை பற்றியோ, மக்களுக்கு தொடர்ந்து நிகழ்த்தப்படும் அநீதி மற்றும் தீர்க்க முடியாத இழப்புகள் பற்றியோ அக்கறைக் கொள்ளவும் ஆறுதல் சொல்லவும் யாரும் தயாராக இல்லை. உலகின் ‘பெரிய சனநாயகம்’ என்று அழைக்கப்படும் இந்திய நாட்டினுடைய அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் அமைப்பும் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் மக்கள் விரோத தன்மைக்கு மாறியுள்ளது.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு, மோடி தொழிலாளர்களின் சேமநல நிதி (PF) நிறுத்திவைக்கப்படும் என்று கூறிய போது, பெங்களூர் நகரமே ஸ்தம்பித்துப் போனது. மோடி பெங்களூரின் சாதாரண ஜவுளித் தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பை தொடர்ந்து மோடி தனது முடிவை உடனடியாக பின்வாங்கி கொண்டார். எனவே மோடி அரசின் மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இது அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பாசிச அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தருணம். நாட்டின் முன்னணி கல்லூகளில் ஒன்றில் மாணவர்களாக இருக்கும் நாம் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்கதுடன் கை கோர்த்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ  போராடுவது முக்கிய கடமையாகும்.
– அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், சென்னை ஐ.ஐ.டி

கருத்துகள் இல்லை: