செவ்வாய், 27 டிசம்பர், 2016

டெல்லியில் எதிர்கட்சிகள் பேரணி .. பணமாற்ற மோசடிக்கு எதிராக மாபெரும்



கருப்பு பணத்தை ஒழிக்க என்று மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க எதிர்த்த எதிர்க்கட்சிகள் இன்று மோடிக்கு எதிராக போராட்டம் அறிவிக்க இருக்கின்றன. இன்று துவங்கி அடுத்த சில நாட்களுக்கு இனி டெல்லி அரசியல் சூடு பிடிக்கும் காங்கிரஸ் தலைமையில் மோடிக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகளோடு மம்தா பானர்ஜியும் இணைந்திருப்பதால் இன்று எதிர்க்கட்சிகள் என்ன அறிவிக்கப் போகிறார்கள் என்பதற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இன்று நடக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து மம்தா கூறுகையில் ‘‘சந்திப்பில் கலந்து கொள்வதற்கு காங்கிரஸ் எனக்கு அழைப்பு விடுத்தது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பங்கேற்கின்றன.
இடது சாரிகள், ஐக்கிய ஜனதா தளம் இதை புறக்கணித்துள்ளன.திமுகவைப் பொருத்தவரை டி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். நேற்று மாலை திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சரஸ்வதி அம்மையார்(82) காலமாகி விட்டதால் திருச்சி சிவாவும், கனிமொழி எம்பியும் திமுக சார்பில் இந்த போராட்ட அறிவிப்பில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: