சனி, 31 டிசம்பர், 2016

தமிழக தலைமை செயலகத்தில் துணை ராணுவம்... கண்டிக்க திராணியில்லை!

வருமான வரி சோதனை என்ற பெயரில் ராணுவம் தமிழ்நாட்டுக்குள் எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி வந்து தனது இஷ்டம் போல் ஏதோதோ செய்கிறது .மாநில உரிமைகள் மீறல் இதுவென்று எங்கோ இருக்கின்ற மம்தா பானர்ஜிக்கு உள்ள ரோஷம் ஆளுகின்ற அதிமுகவுக்கோ அதன் அல்லக்கைகளுக்கோ இல்லையே? அது ஏன்?
ஊழல் சம்பாத்தியம் வாயை மூடி விட்டது! இந்த கேவல நிலைதான்  அதிமுக தமிழகத்துக்கு வாங்கி கொடுத்த சொத்து!
மத்திய அரசின் எந்த அயோக்கிய திட்டத்துக்கும் ஒப்புதல் கொடுக்கும் ஒரு டாபர் மாமா ஆட்சி நடக்கிறது ! இதுவே திமுக ஆட்சியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணிப்பார்ப்பது அவசியமாகிறது .
இப்ப முகநூலில் இயங்கும் சின்ன தம்பிகளுக்கு தெரியாது மாநில உரிமைமைபற்றியும் அது எப்படி என்றும் காமராசர் போன்ற பெரியவர்களுக்குதான் தெரியும் கலைஞரையும் அவரின் போராட்ட குணத்தையும் .
இன்று தமிழ்நாட்டில் அரசு விரல் சூப்பிகிட்டு இருக்கிறது .
மிசா காலம். ஐந்தடி உயரம் உள்ள ஒரு ஆளு முதல்வரா இருந்தாரு. கூட இருந்த மந்திரில இருந்து பெத்த புள்ள வரைக்கும் தூக்கி உள்ள வச்சி அடி வெளுத்தாய்ங்க. மெரீனா பீச்ல மிசாவுக்கு எதிரா தனி ஆளா நின்னு கையெழுத்து நோட்டீஸ் கொடுத்தாரு. இந்தாளு இருக்குற வரைக்கும்தான் நமக்கு பாதுகாப்புனு காமராசரே சொன்ன காலம் அது.
அப்போ திரையில் பெரிய பெரிய சண்டையெல்லாம் போடும் ஒரு ஹீரோ கட்சி ஆரம்பித்திருந்தாரு. ஆனா என்ன பண்ணாரு தெரியுமா? மிசாவை ஆதரிச்சு தீர்மானம் போட்டுட்டு இருந்தாரு.
அப்புறம் ரொம்ப வருசம் கழிச்சு இந்திய ராணுவம் இலங்கைக்கு போயி தமிழர்களை தாக்கி அழிச்சுட்டு அடியும் வாங்கிட்டு வந்துச்சு. அதே ஆள்தான் அப்போ முதல்வர். Protocol படி முதல்வர் ராணுவத்தை வரவேற்க போகணும். ஆனா நம்மாளு தான் மிசாவுக்கே விசா கொடுத்தராச்சே! "தமிழர்களுக்கு எதிரா நீங்க சண்டைபோட்டுட்டு வருவீங்க நான் உங்களை வரவேற்கணுமா... போங்கடா *****"னு வரவேற்க போகல.
இப்போ ரெய்டுங்குற பேருல ரொம்ப வருசம் கழிச்சு துணை ராணுவம் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. நம்மாளுதான் எந்திரிச்சு உக்காந்துட்டாரு. வருவாரு!! Just wait and see!  முகநூல் பதிவு டான் அசோக்

கருத்துகள் இல்லை: