வியாழன், 29 டிசம்பர், 2016

கொள்கைகள் வகுப்பது சசிகலாவாம்... பொதுக்குழு தீர்மானம் : இதயதெய்வம் புரட்சி சின்ன தலைவி அம்மா அவரகள் .. அங்கங்கே கண்மணி பொன்மணி போட்டுகோங்க


சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐந்தாவதாக, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின், ஐந்தாவது தீர்மானம் வருமாறு: கட்சியின் பொதுச் செயலாளராகவும், தொண்டர்களின் தாயாகவும், தவ வாழ்வு வாழ்ந்த தலைவியை இழந்து கட்சி இன்று கலங்கி நிற்கிறது.கட்சியை இனி யார் வழி நடத்தி செல்வது என்ற நிலை ஏற்பட்ட போது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர் தான் எழுந்தது. கட்சியை வழி நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கி கணக்குகளை இயக்க, பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் சட்ட திட்ட விதி -19, பிரிவு -8 ல் பொதுக்குழுவிற்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை, சசிகலாவையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றுகிறது.< இவ்வாறு, ஐந்தாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.தினமலர்
 சசிகலா கொளுகை எப்படி இருக்கும்? எல்லா கல்வி நிறுவனங்களும் , மால்களும், பெரிய வியாபார நிறுவனங்களும் .. நாட்டுடமை........ மன்னிக்கவும் எல்லாமே சசியுடைமை ஆக்கப் படும். ... எல்லாப் போஸ்டிங்குகளுக்கும் மினிமம் 25 லட்சம் கமிஷன் கொடுக்கணும்.. பிறகு அந்த போஸ்டிங்கிற்கு இட மாறுதலுக்கு தனியாக ஐந்து லட்சங்களாம். சேகர் ரெட்டி மறுபடியும் திருப்பதி தேவஸ்தானத்தில் ... உண்டியல் பொறுப்பாளராம் ... திருப்பதி உண்டியல் பணம் முழுவதும் கன்டைனரில் வைத்து போயஸ் தோட்டம் கொண்டு வர பட்டு எண்ணப் படுமாம். மன்னார் குடி கும்பல் பிரித்துக் கொண்டது போக , மிச்சம் உள்ளது போனால் போகிறது என்று , வெங்கடேசப் பெருமாளுக்கு திருப்பி அனுப்பப் படுமாம். உண்டியல் என்னும் பணி போயஸ் கார்டனிலேயே நடப் பதால் ,... வாபஸ் வாங்கப் பட்ட முன்னுற்றம்பது போலீசாரும் மீண்டும் போயஸிலேயே பணியமர்த்தப் படுவார்களாம். இந்த மாதிரி உயரிய கொளுகைகளை ஜெயா டி.வி.யில் அடிக்கடி பார்த்து மனம் சந்தோஷப பட்டுக்கலாமாம் பொது மக்கள். தயாராக இருங்கள் மஹா ஜனங்களே

கருத்துகள் இல்லை: