புதன், 28 டிசம்பர், 2016

தாவூத் இப்ரஹாம் அதிமுக கூட்டு…? வசமாக சிக்கிய ஆவணங்கள்? பியர்லஸ் லோதா மூலம் ஹவாலா?


தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்த பின்பு நடக்கும் அனைத்து சம்பவங்களும்  திக்.. திக்.. நிமிடங்களாகவே உள்ளது.
மத்திய அரசு, ஒரு மாநில அரசின் தலைமை நிர்வாகியிடம் விசாரணை செய்யும் போது ஏன் ராணுவத்தை அனுப்பவேண்டும் என்கிற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்திருக்கும் அது உண்மைதான்.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஒரு பயங்கரவாதி. அந்த பயங்கரவாதிக்கு உதவும் நபருடன் அதிமுக பிரமுகா்களுக்கு தொடா்பு உள்ளது என கூறப்படுகிறது.
என்கிற போது இது சாதாரண ஊழல் வழக்கு இல்லை என்பது தற்போதுதான் புரிய வந்துள்ளது.
கரூா் மாவட்ட அரவக்குறிச்சியில் நடந்த சட்டமன்ற தோ்தல் நிறுத்தப்பட்டது. ஏன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்ற என்றாலும் அந்த அன்புநாதன் சாதாரணமானவர் அல்ல.
அன்புநாதனுடன் தொடர்பு வைத்திருந்த மிக முக்கியமானவா்.  பரஸ் மால் லோதா. இவர் கொல்கத்தாவில் ரௌடி.
பியர்லெஸ் என்கிற கம்பெனியின் உரிமையாளரான இந்த லோதா மூலம்தான் அன்புநாதன் மும்பை, குர்கான், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முதலீடு செய்திருந்தாராம்.
இந்த பரஸ்மால் லோதா தமிழக அமைச்சர்களின் ஊழல் பணத்தை வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கொண்டு செல்கிறார்.
ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலீடு செய்யப்படுகிறது. அத்தனையும் கார்டன் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான ஊழல் பணம்.

பாகிஸ் தானில் இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பணத்தை புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்ற லோதா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்       என வருமானவரித்துறையினா் கண்டுபிடித்தனா்.
லோதாவைப் பிடிக்க மேற்கு வங்கத்தின் சுங்கச் சாவடிகளுக்கு ராணுவத்தை அனுப்பினார்கள். கொல்கத்தாவில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த லோதாவுக்கு பி.சி.சென் என்பவரிடம் இருந்து பியர்லெஸ் கம்பெனியை வாங்கிக் கொடுத்தவர் தாவூத் இப்ராகிம்.
அதற்கு நன்றிக்கடனாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த லோதாவை டிசம்பர் 5-ம் தேதி வலையில் வீழ்த்துகிறது வருமானவரித்துறை.
அப்போது அவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம், “”நான் தாவூத் இப்ராகிமுக்கு பணத்தை மாற்றவில்லை.
சேகர் ரெட்டிக்கும், டாண்டனுக்கும்தான் பணம் மாற்றிக் கொடுத்தேன்” என சொன்னார் லோதா.
டிசம்பர் 5-ந்தேதி முதல் சேகர் ரெட்டியை பின்தொடர்ந்த வருமான வரித்துறை அவரது போனை டேப் செய்தது.
ஜெ.,வின் மரணச் செய்தி வந்தவுடன் சேகர் ரெட்டியின் போனில் பேசிய ராம மோகனராவ், “”இதுவரை ஜெ., இருந்தார். அவர் நம்மை காப்பாற்றினார். இப்பொழுது எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நாம் மாட்டிக் கொள்வோம். உஷாராக இரு. நம்மிடம் கையிருப்பில் உள்ள 181 கோடி ரூபாயை தங்கமாகவும், பணமாகவும் மாற்றி விட்டாய். அதை வேறெங்காவது எடுத்து சென்று விடு. ஆந்திராதான் நமக்கு பாதுகாப்பான இடம்” என சொல்ல, அதை டேப் செய்தது வருமானவரித்துறை.
அத்துடன் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறைக்குப் பக்கத்தி லேயே அறை ஒன்றில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் அமலநாதன், சேகர் ரெட்டியிடம் தொடர்பு கொண்டு ராம மோகனராவின் முதலீடுகளை பற்றி பேசி வந்தார்.
அதனை பதிவு செய்ததுடன், ராம மோகன ராவின் டெலிபோனில் பண விவகாரத்தை பற்றிப் பேசிய ஐ.ஏ.எஸ். அதி காரிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் லிஸ்டையும் வருமான வரித் துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
டிசம்பர் 8-ம் தேதி சேகர் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்தது வருமான வரித்துறை. அவர்களது கேள்வி எல்லாம் பரஸ் மால் லோதா-ராம மோகன ராவ் பற்றியே இருந்தது.
ராம மோகனராவின் மகன் விவேக் பாபி செட்டி, நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் இரவீந்திரநாத், சைதை துரைசாமியின் மகன் வெற்றி ஆகியோர் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் பற்றி குடைந்துள்ளனர்.
சேகர் ரெட்டி முதலில் வாய் திறக்கவில்லை. “பரஸ்மால் லோதா மேல் போட்ட வழக்கில் சேர்ப்போம்’ என சொன்னபிறகு வாய் திறந் தார் ரெட்டி.
அதையடுத்து ராம மோகனராவ் சிக்கிக் கொண்டார் என்கிறார்கள் வருமான வரித்துறை அதி காரிகள்.
இது ஒரு அகில இந்திய அளவிலான நடவடிக்கை. இதற்காக ராணுவத்தைக்கூட பயன்படுத்த நிதித்துறை அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி அனுமதி அளித் துள்ளார்.
பரஸ்மால் லோதா, சேகர் ரெட்டி, ராம மோகனராவ் உட்பட தமிழகத்தில் உள்ள 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இரண்டு ஐ.பி.எஸ். பல மாட்ட உள்ளனா்.
பெரிய அளவில் சிக்குவதால் கார்டன் வட்டாரங்கள் திக்..திக்.. பயத்தில் உள்ளனா். மோடி அடுத்து என்ன வேட்டு வைக்க போகிறார் என்கிற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி நக்கீரன்..!

கருத்துகள் இல்லை: