புதன், 28 டிசம்பர், 2016

டங்கல் ....சினிமா தியேட்டரில் கீதமிசைத்து இருட்டில் எழுந்து.. ?சல்மா !


படத்தின் கதாநாயகியாக ,மல்யுத்தத்த ஆட்டக்கார்ராக ஆண் பெண் பேதமின்றி பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் உணர வைக்கிற ஒரு படம். பெண்களின் பலம் என்ன என்பதையும் ,அவள் நம்பிக்கொண்டிருக்கிற தோற்றம் சார்ந்த பெருமிதங்ளையும் உடைத்து எறிகிறது. பெண்களின்
தலைமுடியை நறுக்கி எறியும் தருணத்தில் தந்தை பெரியாரின் நினைவு மேலிட கண்களில் கசியும் நீரோடு அப்பெண்களின் வெற்றியை கொண்டாடினேன்.
தமிழில் காதல் இல்லாமல் படங்கள் இல்லை .இந்த படத்தில் ஆமிரின் உழைப்பு தனது தோற்றத்தை மாற்றிக்கொள்வதிலும் இருந்திருக்கிறது.
சங்கரின் ஐ மற்றும் எந்திரனை ஏனோ நினைத்துக்கொண்டேன் விஞ்ஞானத்தில் கிடைத்த வெற்றியை பெண்ணை அடைவதற்காக நடக்கிற போராட்டமாக சுருக்கியதையும் , காதலியை அடைய ஐ படத்தில் உடலை நாயகன் உருமாற்றியதும் மிக அசிங்கமான உழைப்பு விரயம்.
விளையாட்டை நுட்பமாக பிரமாண்டமாக போரடிக்காதபடி காட்டியிருப்பதும் பெண்ணின் உடலை பெருமிதப்படுத்தி இருப்பதும் அழகாக நிகழ்ந்திருக்கிறது. இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பெண்களை கவுரவப்படுத்த விரும்பும் இந்த நடிகனைத்தான் தேசபக்தி இல்லாதவன் என்று வெறியாட்டம் போட்டது காவி கும்பல்.
அவர்களது முகத்தில் காறி உமிழ்கிறது இந்த படம்.

தேசபக்தி சினிமா தியேட்டரில் கீதமிசைத்து இருட்டில் எழுந்து நிற்பதல்ல. சக மனுசியின் மீது நம்பிக்கையை மரியாதையை உருவாக்கிக்கொள்வது..
வாழ்த்துக்கள் அமீர்
We love you. முகநூல்பதிவு  சல்மா 

கருத்துகள் இல்லை: