வியாழன், 29 டிசம்பர், 2016

ஆட்கொணர்வு மனு:புஷ்பா கணவர் ஜாமினில் விடுதலை! விதிமுறை மீறிய பொதுக்குழு செல்லாது?

லிங்கேஸ்வரன் திலகத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர் என்று தமிழக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.. ... எனவே அதிமுகவின் பொதுக்குழு கூட்டியமை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க முடியும்
இன்று(29/12/2016) காலை சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் இன்று ஜாமீனில் போலீசாரால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக தலைமைக்கழகத்தில் நேற்று(28/12/2016) இருதரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, லிங்கேஸ்வரன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்களது பிடியில் வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால், அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், சசிகலா புஷ்பாவுக்கு பதில், அவரின், கணவர் லிங்கேஸ்வரன் திலகன் வந்தார். லிங்கேஸ்வர திலகன் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அதிமுகவினர் சிலர் அவரை கடுமையாக தாக்கினர்.
இதில் லிங்கேஸ்வரன் மூக்கு உடைபட்டது. ரத்த வெள்ளத்தில் அவரை போலீசார் இழுத்து சென்றனர். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு லிங்கேஸ்வரன் எங்கே உள்ளார் என்பது வெளியுலகிற்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள், நேற்று இரவு 10.15 மணிக்கு உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரது வீட்டிற்கு சென்று, அவசர ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு சசிகலா புஷ்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக என் கணவர் லிங்கேஸ்வரன் திலகம் மற்றும் சிலர் அதிமுக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த சிலர், என் கணவரையும் அவருடன் சென்றவர்களையும் கொடூரமாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், அதன்பின்னர் என் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று காலையில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, "லிங்கேஸ்வரன் திலகத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். தற்போது அவரை விடுவித்து விட்டதால், இந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: