
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர் நடிகர் அஜித். ஜெயலலிதா மறைவடைந்த போது பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித். அதனால் அவரால் உடனடியாக இங்கு வர இயலவில்லை. ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிலும் அஜித்தால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து இரங்கல் மட்டும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் பல்கேரியாவில் இருந்து தமிழகம் திரும்பிய அஜித், சென்னை விமான நிலையம் வந்திறங்கியதும் நேரடியாக ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தனது மனைவி ஷாலினியுடன் சென்றார். பின்னர் அங்கு தனது அஞ்சலியை அவர் செலுத்தினார்.
இந்நிலையில் நேற்று போயஸ் கார்டன் வந்த அஜித், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறப்படுகிறது. tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக