சனி, 31 டிசம்பர், 2016

விபரம் புரியாமல் ,சிந்திக்காமல் அவசரத்தில் எடுத்த முடிவு.. அமர்தியா சென் பணமதிப்பிழப்பு பற்றி கூறியது


மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பவர்களுள் ஒருவர் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றஅவருடைய விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் கருத்துகள் என்று பாஜக நிராகரித்து வந்தாலும் கூட அமர்த்தியா சென் தன் விமர்சனங்களைத் தொடர்ந்து வருகிறார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும் போது, “ அனைத்து தரப்பிலும் உரிய ஆலோசனை நடத்தி விட்டு இந்த முடிவு( பண மதிப்பு நீக்க நடவடிக்கை) எடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை. விளைவுகள் பற்றி சிந்திக்காமல் அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணத்தை என்னால் கண்டறியமுடியல்லை பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: