செவ்வாய், 27 டிசம்பர், 2016

20,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து ! RSS அஜெண்டா ?

டெல்லி: வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெரும் 20,000 தொண்டு நிறுவங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது. முறையான ஆவணம் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வெளி நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஜூன் மாதத்துக்குள் தங்களின் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவகாசம் கொடுத்தும் இதுவரை புதுப்பிக்காமல் இருந்த தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. அதன்படி, முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் நாடு முழுவதும் உள்ள 20,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த களையெடுப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது 13,000 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இதேபோல் புதுப்பிக்காத 11,319 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கதுb தினமலர்

கருத்துகள் இல்லை: