
https://www.colombotelegraph.com/index.php/tna-accuses-swaminathan-of-influencing-mps-in-arcelormittal-deal-to-build-tin-houses/ இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு இன்று நான் சொல்கின்ற செய்தி. நொந்துபோய்
இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் எங்கள் மக்களுடைய தன்மானத்துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேசசெயலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கலாசார பெரு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கரவெட்டி பிரதேசசெயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் பெரு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் மேலும்
கூறியதாவது எங்களுடைய பண்பாட்டுக்கும் வாழ்க்கை முறைக்கும்
எதிரான விடயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த உலோகத்தகட்டிலான
வீட்டினை எமது தலைவரான எதிர்கட்சித்தலைவர் வீடு என்று கூட
கூறுவதில்லை. கூடு என்றுதான் அழைக்கின்றார்.
திரும்ப திரும்ப பிரதமரிடத்திலும் பாராளுமன்றத்திலும் எமது தலைவர் சொல்வது எமது மக்கள் மிகவும் நொந்து போய்விட்டார்கள்.
அடிப்படையிலான ஒருவீடு கொடுக்க வேண்டும். கூடு எல்லாம் வேண்டாம்.
இந்த இரும்புக்கூட்டினை கொடுப்பதன் மூலமாக அவர்களுக்கு நீங்கள்
நிவாரணம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் நீங்கள்
அமைத்து கொடுக்கவில்லை.
ஒரு நிரந்தர கல்வீடு கட்டுவதற்கு
எவ்வளவு செலவாகின்றது. அதைவிட இரட்டிப்பான செலவில் தற்காலிக
இரும்புக் கூட்டை கொடுப்பதன் மூலமாக எங்களை ஏமாற்றுகின்ற
செயற்பாட்டில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
அந்த மிகுதிப் பணம் எவருடைய பையிலே போய் சேருகின்றது என்பது
எங்களுக்கு தெரியும். இது முற்று முழுதான ஓர் ஊழல் செயற்பாடு. அதை
ஊழலில் ஊறிப்போன செயற்பாடு என்பதை நாம் சொல்லி இருக்கின்றோம்.
அதையும் கேட்காமல் அமைச்சர்
சுவாமிநாதன் தொடர்ச்சியாக எங்கள் மக்களை ஏமாற்றுகின்ற விதத்திலே
பத்திரிகையில் விளம்பரங்களை போட்டு செயற்படுத்துவதாக இருந்தால்
அந்த ஊழலை நாம் வௌிப்படுத்துகிற காலம் வந்துள்ளது.
வெளிப்படையாக எவருக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கபட்டுள்ளது என்பதை அறிவிப்பதற்குரிய காலம் வந்திருக்கின்றது.இறுதியாக இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு நான் இன்று சொல்லுகின்ற செய்தி, நொந்து போய் இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். எங்களுடைய மக்களுடைய தன்மானத்திற்கு நீங்கள் இழுக்கு கொண்டுவர வேண்டாம்.
தமிழ் பெயரைத்தாங்கி இருக்கின்ற
உங்களுடைய பெயருக்கும் வீணாக இழுக்கை கொண்டு வர எங்களை
உந்தாதீர்கள். ஊழலை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். எங்களுடைய
மக்களுக்கு அவசர தேவை ஒன்று இருக்கின்றது.
என்ற ஒரே காரணத்தை வைத்து மற்றவர்கள் தங்களுடைய பைகளை பணத்தினால் நிரப்புகின்ற செயற்பாட்டினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அமைச்சருக்கு கொடுக்கின்றோம் என்றார். முகநூல் பதிவுகள்
என்ற ஒரே காரணத்தை வைத்து மற்றவர்கள் தங்களுடைய பைகளை பணத்தினால் நிரப்புகின்ற செயற்பாட்டினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அமைச்சருக்கு கொடுக்கின்றோம் என்றார். முகநூல் பதிவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக