திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பாவின் கணவர் மகன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. வழக்கு எதுவும் பதிவில் இல்லை

முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு: முடித்து வைத்து ஐகோர்ட் தள்ளுபடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப். இவர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கேட்டு கடந்த வியாழக்கிழமை சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தனர். சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில், பெயர் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு எதிராக 3 புகார்கள் கொடுத்திருப்பதாகவும், இந்த புகாரில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், இருவரின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி வைத்திநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், இவர்கள் இரண்டு பேர் மீதும் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக கூறி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். -ஜீவா பாரதி நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: