சனி, 13 ஆகஸ்ட், 2016

நயன்தாராவுக்கு தெலுங்கு படவுலகம் தடை விதிக்க ஆலோசனை!

படத்தின் புரமோஷன்களுக்கு வரமாட்டார். கிளாமர், நெருக்கம் காட்ட வேண்டும் என்றால் அதனை கதை சொல்லும்போதே சொல்லிவிட வேண்டும். சில ஹீரோக்கள், இயக்குநர்கள் தங்கள் இஷ்டத்துக்கு காட்சிகளை மாற்றுவார்கள். இந்த கதையே இருக்கக்கூடாது.
இவையெல்லாம் நயன்தாரா படத்தில் கமிட் ஆகும் முன்பே விதிக்கும் நிபந்தனைகள். முன்பே ஒருமுறை தெலுங்கில் இதுபோல ஒரு பிரச்னை உருவாகி, நயனுக்குத் தெலுங்கு பட உலகம் நடிக்க தடை போட்டுவிட்டது. இதனால் தவித்துப்போன ஹீரோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நயனுக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர். வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கிறது ‘பாபு பங்காரம்’. தமிழில் நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக தமிழில் டப் செய்யப்பட்டு ‘செல்வி’ எனும் பெயரிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு ஆடுகிறேன் என்று ஓகே சொல்லியிருந்த நயன், படப்பிடிப்பின்போது முடியாது என மறுத்துவிட்டார். காஸ்ட்யூமை மாற்றாவிட்டால் பாடலில் நடிக்கவே மாட்டேன் என்று சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிக்கு போய்விட, அந்த பாடல் இல்லாமலேயே படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இது ஆந்திர சங்கங்களுக்கு புகாராகப் போக, நயன்தாராவுக்கு மீண்டும் ‘ரெட் கார்டு’ போடும் யோசனையில் இருக்கிறது டோலிவுட்.
நயன்தாரா சமீப காலமாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து ப்ளாக்பஸ்டரான படங்களின் புரமோஷனுக்கே அவர் வந்ததில்லை. தாய்ப்பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாரர் திரில்லரான ‘மாயா’ பட புரமோஷனுக்கு மட்டுமே அவர் கடைசியாக வந்தார்.  மின்னம்பலம .கம

கருத்துகள் இல்லை: