வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்கு பிரான்ஸ் கேன் நகரில் தடை..

சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும்
மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும்  bbc.com

கருத்துகள் இல்லை: