வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சாதி சான்றிதழ் இல்லாமல் இருளர் பெண் நிஷா படிப்பை தொடர முடியவில்லை

நாங்க படிக்கல, எங்க புள்ளைங்க படிக்கல, ஆனால் எங்க பேரப்புள்ளைக படிக்குதுங்க, ஆனால் சாதிச்சான்று கிடைக்காமல் எங்க பேரப் புள்ளைக காலேஜில் சேர முடியலையே,பழங்குடி இருளர்களாகிய நாங்கள் மேல்படிப்பு படிக்க முடியாமல் செங்கல் சூளைகளிலும்,கல் குவாரிகளிலும் கொத்தடிமையாகக் கிடக்க வேண்டும் என்பது எங்கள் தலையெழுத்தா?எங்கள் தலையெழுத்தை அரசாங்கம்தாம் தீர்மானம் செய்கிறதா?
மழை வெள்ள நிவாரணப் பணியின் போது எனக்கு அறிமுகமானவர் பழங்குடி இருளர் பெண் நிஷா,+2 படிக்கிறேன் என்றார்,

உற்சாகப்படுத்தி விட்டு பேராசிரியர் கல்யாணி அய்யாவின் நெம்பர் கொடுத்து விட்டு வந்தேன்,+2 ரிசல்ட் வந்த பிறகு அவரைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றேன்,திண்டிவனம் அருகில் வசிக்கும் அவர் சாதிச்சான்று கிடைக்காததால் மேல்படிப்பு படிக்க முடியாமல் செங்கல்பட்டு அருகே ஏதோ ஒரு கம்பெனியில் கூலி வேலைக்குச் சென்றிருப்பதாக அவர் பெற்றோர் கூறினர்,பேராசிரியர் கல்யாணி அய்யாவும்,பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கமும் அவருக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்,சான்றிதழ் கிடைத்தால் மேல்படிப்பு படிப்பார்,இல்லையேல்...........
இந்த அவலநிலைக்கு யார் காரணம்?   முகநூல் பதிவு   Rajesh Dee

கருத்துகள் இல்லை: