


ஆலப்புழா: காங்கிரஸ் கட்சியின் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கார் மோதிய சம்பவத்தில் ஒருவர் பலியானார். காங்கிரஸ் எம்.பி.,யான ஜோதிர்
ஆதித்யா சிந்தியா, ஆலப்புழாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க, கொச்சியிலிருந்து காரில் சென்றார். ஆலப்புழாவை நெருங்கும் நேரத்தில், அவரது கார் சாலையில் சென்றவர் மீது மோதியது. இதில் 22 வயதான இளைஞர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தனது கார் டிரைவரை போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்து விட்டு ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காயமடைந்த நபருடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, காயமடைந்த நபர் மரணமடைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
. இந்த விபத்து சம்பவத்தை ஜோதிர் ஆதித்யா சிந்தியா டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். தினமலர்.காம் குவாலியூர் அரச குடும்பத்தை சேர்ந்த இவர்கள் காங்கிரசிலும் பஜகாவிலும் நன்றாக வேரூன்றி உள்ளனர்.இவரது பெரியம்மாதான் ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள வசுந்தர ராஜே சிந்தியாவாகும்.இவருக்கு முன்பாக அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் நிலத்தில்தான் உட்காரவேண்டும் .இவரது பாட்டி விஜய ராஜே சிந்தியாதான் ஜனசங்கின் ஆரம்ப மத்திய குழு உறுப்பினராவார். இன்றும் கூட இவர்கள் தங்கள் ராஜபோக நடைமுறைகளை கைவிடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக