சனி, 13 ஆகஸ்ட், 2016

டெல்லி இரக்கமற்ற டெம்போ சாரதி கைது.. இறந்தவருக்கு நான்கு குழந்தைகள் delhi hit and run tempo driver arrestedடெல்லியில், சாலையில் சென்ற ஒருவர் மீது தனது வாகனத்தை மோதி படுகாயமடைய செய்துவிட்டு, அந்த நபரை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பிச் சென்ற டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சுபாஷ் நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மாதிபுல் என்பவர் மீது, நேற்று முன்தினம் அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. விபத்தில் சிக்கியவரை அப்படியே விட்டு விட்டு டெம்போ டிரைவர் தப்பிச் சென்று விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அவர், சாலையிலேயே உயிருக்கு போராடி  சிகிச்சையும் கிடைக்காமல், முடிவில் இறந்தும் போய் விட்டார். அது மட்டுமல்ல காயமடைந்து கிடந்த மனிதரிடம் இருந்து செல்போனையும் ரிக் ஷா ஓட்டும் ஒருவர திருடிக் கொண்டு போய் விட்டார். ஏராளமான மக்கள் அவரை கடந்து சென்றும் யாரும் உதவி செய்யவில்லை. ஆம்புலன்சுக்கு கூட தகவல் அளிக்கவில்லை.  


இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகியது.  இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு,  விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டெம்போ டிரைவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கருத்துகள் இல்லை: