சனி, 13 ஆகஸ்ட், 2016

ஜோக்கர் மிகவும் சிறப்பான படம் .. விமர்சனம் .. கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான அரசியல் பகடி
திரைப்படம். வசனங்கள் ஒவ்வொன்றும் சரவெடி பட்டாசாய் தெறிக்கிறது.
பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் Sean Roldan.
இரண்டு முன்னணி பெண்
கதாப்பாத்திரங்களும் அருமையான வடிவமைப்பு. ஜெயகாந்தனின் தோற்றத்தில் வரும் பொன்னூஞ்சல் மனதில் ஆழப்பதிகிறார்.
அம்பேத்கர், பெரியார், ரோஹித் வெமுலா படங்களையும், கட்சிகொடிகள் காட்டப்படும் இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி Raju murugan-இன் அரசியல் அறிவு வெளிப்படுகிறது.
பளிச்சென தெரியும் போதும் இயக்குநர்
உச்ச நீதிமன்ற வழக்காடும் அறை, நீதிபதிகள் இருவரும் பேசிக்கொள்வது, சஃபாரி சூட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளென அனைத்தையும் அச்சு அசல் அப்படியே காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் எப்படி இருக்குமென்பதை இப்படத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

Bavachelladurai தோழரின் நடிப்பு அற்புதம். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாவற்றிலும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நெஞ்சை நிரப்புகிறார். பவா தோழர் கபாலி திரைப்படத்தில் சொல்வது போல அப்படியே எடுத்து பூசிக்கொள்ள தோன்றும் அழகு கருப்பு உங்களுடையது. திரையில் மின்னுகிறீர்கள். அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கண்டிப்பாய் குவியப்போகின்றன வாழ்த்துக்கள்!
அன்சாரி முஹம்மது அண்ணா, தோழர் கருப்பு கருணா பெயர்களையும், Yuva Krishna, நண்பர் Athisha Vino, Boopathy Murugesh, Niyas Ahmed போன்ற முகநூல் மன்னர்களின் பெயர்களை படத்தில் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது பெருமகிழ்ச்சி.
மனித உரிமை மீறல் ஏற்படும் காட்சிகளில் தோழர்கள் எவிடென்ஸ் கதிர் (Vincent Raj) மற்றும் Henri Tiphagne ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருப்பது அவர்களின் நெடுங்கால மனித உரிமை பணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
படத்தின் கதை, மையக்கரு ஆகியவற்றை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பலமுறை பார்க்க வைக்கும் மிகவும் சிறப்பான படம்.
முகநூல்  பதிவு  கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை: