வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சுடுகாட்டை ஆக்கிரமித்த ஈஷா ஜாக்கி வாசுதேவ் : பழங்குடியின மக்கள் புகார்


கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையம் பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக புகார் தெரிவித்துள்ள பழங்குடிகள், தங்களது சுடுகாட்டினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் அருகே மடக்காடு என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டினை காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மடக்காடு பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து உள்ளதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டார நிலங்களை விலைக்கு வாங்கியுள்ள ஈஷா யோகா மையம் தாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாகவும், நில அளவை செய்து யோகா மையத்தினர் சுடுகாட்டின் நடுவில் கல் நட்டு உள்ளதாகவும் பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தங்களது சுடுகாட்டினை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழங்குடியின மக்களின் ஊர்த்தலைவர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து பல திடுக்கிடும் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. - அருள்குமார்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: