வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

கே.பாக்கியராஜ்; நாட்ல நெறைய பேரு நான்தான் கடவுள் பிரதிநிதின்னு ... பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்

கடவுளின் பிரதிநிதிகள் என கூறும் ஆசாமிகளிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கே.பாக்கியராஜ் கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் கூறியுள்ளார். ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய பாக்கியராஜ், நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி என சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். நம்ம ஜனங்க புரிஞ்சுக்காக கால்ல விழுந்துகிட்டே இருக்காங்க. மாட்டிக்கிட்டு கொஞ்ச நாள் கழித்து இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார் என்கின்றனர். இன்னமும் சாமியார்களின் காலம் நல்லவா இருக்கிறது. நமது தாய்மார்கள் இந்த சாமி விஷயத்தில மட்டும் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். தயவு செய்து கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.நக்கீரன்.இன் 

கருத்துகள் இல்லை: