ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

ஜாக்கியின் இஷாவால் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள்.. மதுரை போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார்

மதுரையில் உள்ள போலீஸ் ஏட்டு மகேந்திரனுக்கு இரண்டு மகன்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் கோவையிலுள்ள ஈஷா மைய பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துவிட்டார். அங்கே அந்த குழந்தைகளுக்கு படிப்பைவிடவும், பிரம்மச் சரியத்தையே போதித்துள்ளனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு உணவு கட்டுப்பாடு, வேலைப்பளு இருந்ததால் அந்த குழந்தைகள் பித்துப்பிடித்து போன மனநிலையில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கொடுத்துள்ளார்கள் ஈஷா மையத்தினர். இதனால் அக்குழந்தைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லபடியாக படிக்க வேண்டும் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளை இப்படி சித்திரவதை செய்து பிரம்மச்சரியத்தை போதிக்கிறது ஈஷா மையம் என்பதை உணர்ந்த மகேந்திரன் , தன் இரு குழந்தைகளையும் மதுரைக்கே அழைத்து வந்துவிட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட தன் இரு குழந்தைகளையும் அழைத்துச்சென்று இன்று கோவை மாவட்ட ஆட்சியர் முன் வாக்குமூலம் அளித்து, ஈஷா மையத்தின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவிருக்கிறார் மகேந்திரன்.


பின்னர் ஹேம்ந்தும், சமயோகித்தும் தங்களுக்கு ஏற்பட்ட செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறினர். அவர்கள், ‘’அங்கே எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. பிரம்மச்சரியம் போதிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். இதனால் துடிப்புடன், குறும்புத்தனங்களுடன் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு ’சேவா’ எனும் பெயரில் தண்டனை கொடுப்பார்கள். அதாவது, மாட்டுத்தொழுவத்தில் தினமும் சாணம் அள்ளச்சொன்னார்கள். 100க்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்களில் ஒவ்வொன்றுக்கும் 10 லிட்டம் தண்ணீர் ஊற்றவேண்டும்.

தினமும் நாங்கள் செய்வோம். ஈஷாவில் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு தினமும் துணிகளை துவைக்க வேண்டும். எல்லோருக்கும் சாப்பாடு பறிமாறிவிட்டுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். நாங்கள்

சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு, புளிப்பு, காரம் என்று எதுவும் இருக்காது. விளையாட்டில் கூட நாங்கள் விளையாடக்கூடாது விளையாடுபவர்களுக்கு பந்து பொறிக்கி போடவேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் 500 தோப்புக்கரணம் போடவேண்டும்’’ என்று ஈஷாவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் அடுக்கிக்கொண்டே சென்றனர். - அருள்குமார்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: