வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சந்திரபாபு நாயுடு + செம்மர வியாபாரிகள்... அப்பாவி ஏழைகளை ஒருபக்கம் கைது செய்துவிட்டு மறுபக்கம்....நடக்கட்டும் நடக்கட்டும்

செம்மரம் வெட்டும் விவகாரம் ?
அம்மாவின் நண்பரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் ஒரு கேள்வி ?
டியர் நாயுடு காரு.....
1. செம்மரங்களை வெட்ட...சொல்கிற முதலாளிகள் யார் யார் ?
2. அதற்கு ஆள் அமர்த்தும் தரகர்கள் யார் யார் ?
3 மரங்கள் வெட்டி கடத்த உறுதுணையாக உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் யார் யார் ?
4. கடத்தலில் தொடர்புடைய நபர்கள்...நிறுவங்கள் எவை ? எவை ?
5 இவற்றைப்பற்றியெல்லாம் விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கவேண்டிய உங்கள் நிர்வாகம்...அதையெல்லாம் விட்டுவிட்டு....

திருப்பதிக்கு சாமி கும்பிட வருகின்ற...கருத்த வதங்கிய தோலுடைய ...ஒட்டிய வயிறுடன் வரும் ஏழை தமிழர்களை மட்டும் கைது செய்வது என் ?
துணையான குற்றவாளிகளுக்கு உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும்...அவர்களிடமிருந்து உங்களுக்கு பங்கு வருகிறது என்றும்...அந்த உண்மையை மறைக்கவே...அப்பாவி மக்களை கைது செய்து...செம்மர கடத்தலை தடுப்பது போல நீங்கள் நாடகம் ஆடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்களே ?

அது உண்மைதானா ?
அவர்களின் குற்றச்சாட்டு உண்மை அல்ல என்றால் உண்மை குற்றவாளிகளை இன்னும் ஏன் கைது செய்யவில்லை ?
ஆனால் ஒன்று..... அப்பாவியை ஏழைகளின் கண்ணீர் உங்களை சும்மா விடாது நினைவிருக்கட்டும்.   முகநூல் பதிவு damodran chennai

கருத்துகள் இல்லை: