செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ரூ.570 கோடி காண்டேயினர் கரன்சி : சிபிஐ வழக்குப் பதிவு

கோப்புப் படம். திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்கள் காட்டப்பட்டதால் பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனிடையே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்பேரில் முதல்கட்ட விசாரணையை முடித்த பிறகு சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்தது tamilthehindu.com

கருத்துகள் இல்லை: