சனி, 13 ஆகஸ்ட், 2016

மணிப்பூர் இரோம் ஷர்மிளா முதல்வர் வேட்பளராக ஆம் ஆத்மி தயார் !

புதுடெல்லி, இரோம் சர்மிளா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டால் மணிப்பூர் முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் சர்மிளா 9-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்–அமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார்.  ஜவகர்லால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சையின்ஸ் வளாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் சர்மிளாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரோம் சர்மிளாவை சந்தித்து பேசினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் (இரோம் சர்மிளா) இணைந்து போட்டியிட வேண்டும். மேலும் முதல்-மந்திரி வேட்பாளராகவும் நிறுத்த நாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறினர். dailaythanthi.com

கருத்துகள் இல்லை: