


எதிர்ப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதோடு சரி. பின்னவர் எதிர்ப்பவர்களின் உயிரை
எடுக்கவும் தயங்கமாட்டார். அவ்வளவு தான் வித்தியாசம்.

எண்ணற்ற ஊடகங்கள் உள்ளன. இந்தியாவை தாண்டி பிரபலமான வெளிநாட்டு ஏடுகளும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளன என்பதை மறந்துவிடுகிறார்கள். சரி விவகாரத்துக்கு வருவோம்.
தூத்துக்குடியில் பிறந்து, திருமணமாகி, சென்னையில் வாழ்க்கை நடத்தியவர் சசிகலாபுஷ்பா. அதிமுகவில் பதவியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடனான நெருக்கத்தால் அதிமுகவில் இணைந்து, கட்சி பதவி, தூத்துக்குடி மேயர் பதவி என வலம் வந்தர் மாநிலங்களவை எம்.பியாகி அதிமுகவின் மாநிலங்களவை கொறடா என முக்கிய பதவியும் வகித்தவர். ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தனது ஆண் தோழருடனான அந்தரங்க பேச்சு ஆடியோ, திமுகவின் முக்கிய எம்.பியான திருச்சிசிவாவுடனான ஜோடி புகைப்படம் என சர்ச்சை ரவுண்ட் கட்டியதில் இருந்து சசிகலாபுஷ்பாவுக்கு இறங்கு முகம். இறுதியாக கடந்த வாரம், டெல்லி விமான நிலையத்தில் சென்னை வர காத்திருந்தபோது, திமுக எம்.பி திருச்சி சிவா கன்னத்தில், அதிமுகவை சேர்ந்த சசிகலாபுஷ்பா அறைய தேசிய அளவிலான விவாதமாக மாறியது. உடனடியாக இரு எம்.பிகளையும் அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரித்தது.
விசாரணை எப்படி நடந்தது என்பதை இந்தியாவின் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கூறியது, எம்.பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி என் கன்னத்தில் அடித்தார் எங்கள் கட்சி தலைவி. அவர் மட்டும்மல்ல அங்கு சிலரும் தாக்கினார்கள். நாயை போல் அடைத்து வைத்திருந்தார்கள். என் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை என நாடாளமன்றத்தில் கதறினார். இதை கேட்ட இந்திய நாடாளமன்ற உறுப்பினர்கள் மட்டும்மல்ல, நேரடி ஒளிப்பரப்பில் கேட்டுக்கொண்டுயிருந்த தமிழகம் தவிர்ந்து இந்தியா முழுவதும்முள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
தமிழக மக்கள் அதிர்ச்சியடையவில்லை, சசிகலாபுஷ்பாவை நினைத்து பரிதாபப்பட்டனர். காரணம், ஜெ கட்சி நிர்வாகிகளை அடிப்பார் என்பது இலை மறை காயாக மக்கள் அறிந்தது தான். அதனால் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் பரிதாப்படகாரணம், ஜெவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் இன்று வரை தமிழகம் கண்டுக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மீடியாக்கள், மடாதிபதிகள் என எல்லா மட்டத்திலும் பயத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஜெ. அந்த பயத்தை வைத்தே கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறார். அந்த கட்டமைக்கப்பட்ட பய பிம்பத்தை தான் உடைத்திருக்கிறார் சசிகலாபுஷ்பா.
நாடாளமன்றத்தில் ஜெ மீது குற்றம்சாட்டி தான் பேசினால் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பது சசிகலாபுஷ்பா அறியாமல் பேசியிருக்க 100 சதவிதம் வாய்ப்பில்லை. காரணம், முதல்வரான தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக என்னை கவர்னர் சென்னாரெட்டி என் கையை பிடித்து இழுத்தார் என்றவர் ஜெ. ஜெவை விட நான் அழகு எனச்சொன்ன ஒரே காரணத்துக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் அடிக்க வைத்தது, தனது ஆடிட்டர் தாக்கப்பட்டது, தனது தோழி சசிகலாநடராஜன் வாழ்வில் புகுந்ததால் இளம்பெண் செரினா வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது, வளர்ப்பு மகனை கஞ்சா வழக்கில் கசக்கி எடுத்தது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் ஓடஓட விரட்டி செருப்பால் அடிக்க வைத்தது, மணிசங்கர்அய்யரை சென்னை விமானநிலையம் முதல் பாண்டிச்சேரி வரை அடிக்க விரட்டியது, ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமிக்கு தரப்பட்ட அர்ச்சனை தமிழகம் மட்டும்மல்ல இந்தியாவே அறிந்தது தான், சசிகலாபுஷ்பா அறியாமல் இருப்பாரா என்ன. அறிந்துயிருப்பார். அப்படியிருந்தும் பேசியிருக்கிறார்.
என் யூகம், சசிகலா பின்னால் பெரும் பாதுகாப்பு அரண் உள்ளது. அவர்கள் தந்த தைரியம் தான் இவ்வளவு தைரியமாக நாடாளமன்றத்தில் சசிகலாபுஷ்பா வெடித்துள்ளார். சசிகலாபுஷ்பாவுக்கு பின்னால், கார்னட் மணல் வைகுண்டராஜன் உள்ளார் என்கிறது ஒரு தரப்பு, திமுக கனிமொழி உள்ளார் என்கிறது இன்னொரு தரப்பு. இன்னும் சிலரோ, காங்கிரஸ் சப்போட் உள்ளது என்கிறது. யார் இருந்தாலும் ஜெ கவலைப்படமாட்டார். தன்னை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை ஜெ காட்டியே தீருவார். அவர்கள் எத்தனை பெரிய அதிகார மையத்தின் உதவியுடன் இருந்தாலும் கவலைப்படமாட்டார். இந்திய அதிகாரத்தின் உச்சமான ஜனாதிபதியே காஞ்சி சங்கரமடம் வந்தால் பம்முவார்கள். அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்து பிதுக்கி எடுத்தவர் ஜெ.
இப்படி மற்றவர்களை பழிவாங்குவதற்கு மற்றொரு காரணம், இந்த பயத்தை வைத்து தான் எல்லாரையும் அடக்கி ஒடுக்கி வருகிறார். அந்த பயம் போனால், கட்சியும், ஆட்சியும் தன் கைவிட்டு போய்விடும், தன்னை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதை உணர்ந்ததால் தான் எதிர்ப்பவன் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் நசுக்கி இதோப்பார் என்னை எதிர்த்தால் இதுதான் நிலைமை என எல்லா தரப்புக்கும் காட்டி பயத்துடன் வைத்திருக்க விரும்புவார். அதனால் நிச்சயம் சசிகலாபுஷ்பா எச்சிரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிமுகவில் அடிஉதை என்பது புதியதல்ல. அதிமுகவை தொடங்கிய நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், முதல்வரான பின், தன்னை எதிர்க்கும் கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை அடித்து உதைக்க, வெளியே தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க சமீபத்தில் மறைந்த ஜேப்பியார் தலைமையில் பெரும் அடியாள் படையே ராமாவரம் தோட்டத்தில் வைத்திருந்தார் என்பது தமிழக மூத்தோர்கள் அறிந்தது. அதிமுகவை ஜெ கைப்பற்றியது போல. அடி உதை வழக்கத்தையும் ஜெ பின்பற்றுகிறார். முன்னவர் எதிர்ப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதோடு சரி. பின்னவர் எதிர்ப்பவர்களின் உயிரை எடுக்கவும் தயங்கமாட்டார். அவ்வளவு தான் வித்தியாசம். முகநூல் பதிவு :: JayaFails
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக