வெள்ளி, 14 அக்டோபர், 2016

வதந்திகளை பரப்பிய அப்போலோவும் தந்தி டிவியும் .. எது வதந்தி ? மோருக்குள் விஷம் கலந்ததா?

1- எம்ஜியார் மறைந்த போது ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் நேரிடையாக அப்பொழுதைய முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்தான் மோரில் விஷம் கலந்து எம்ஜியாரை கொன்றார் என்று ஒரு வதந்தியை பரப்பினார் இதே ஜெயலலிதா, அவர் மேல் கூட இப்படி வதந்தி பரப்பிய வழக்கு போடப்படுமா என்பதை காவல்துறை தலைவர் விளக்கம் அளிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமும் எம்ஜியாரின் உண்மை தொண்டனின் விருப்பமும்... அதற்க்கு த்ராணியுண்டா காவல்துறைக்கு...
  2- முதலில் அவை வதந்தியா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.... வதந்தியாக இல்லாவிடில் இருக்கும் மெய்யான நிலைமை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்... அதுவும் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் நடைபெறமுடியும்...
3 - இது என்ன கொடுமையா இருக்கு.. ?? என்னத்தான் நடக்குது தமிழ் நாட்டுல?? கலைஞர் குடும்பம் & திமுகவை பற்றியெல்லாம் இங்கே பேசாத பொய்களா???? பரப்பபடாத வதந்திகளா?? ஆனால், இப்போதோ, வாயை திறந்தாலே போலீஸ் நடவடிகையா??? இதுயென்ன சர்வாதிகார நாடா???
4- இவங்களுக்கெல்லாம் இதைவிட முக்கியமான வேற வேலையே இல்லியா? இந்தக்குழு, சங்கிலி பறிக்கிறவன், ரோட்டை குளத்தை ஆக்கிரமிப்பு பண்றவனுவோலை போயி கவனிக்கலாமே.   அம்மாவுக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல்தான்  இரண்டு நாளில் வீடு திரும்பலாம் என்று முதல் வதந்தியை பரப்பியது அப்போலோ +  அதிமுக ..

5 - அரசாங்கம் முதல்வரின் உடல் நிலையை ஒழுங்கா சொல்லியிருந்தா ஏன் வதந்தி பரவுது. ஒட்டு போட்டவனுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு சில மாபியா கூட்டங்கள், கட்சியையும் ஆட்சியையும் தங்கள் வசம் வச்சுக்க காவல் துறையை வைத்து மக்களை மிரட்டுது. காலம் வரும்போது நாங்களும் தீர்ப்பு சொல்வோம்.
6 - கோர்ட் உத்திரவு போட்டபின்பும் ஆட்டோக்காரன் மீட்டர் போடாம வாய்க்குவந்த கட்டணத்தை கேட்குறான் இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை இல்லை சமீபத்தில் சில இளம் பெண்கள் ஈவ் டீசிங் காரணமாக போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டனர்.இதன் மீது எல்லாம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறது ?
7 -கரூர் அன்புநாதனை பிடிச்சாச்சு. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளுவை வளைச்சாச்சு. இதோ, இப்போ எலி வேட்டைக்கு கிளம்பியாச்சு.
8 -தமிழ்நாட்டுலே கொலை கொள்ளை எல்லாம் புடிக்க துப்பு இல்ல அம்மா வ பத்தி வதந்தி பரப்புறவங்கள புடிக்கிறாங்களாம்.., கவர்மென்ட் ஏன் முதலமைச்சர் பத்தி அறிக்கை விட கூடாது. தமிழ்நாடு காவல் துறை சரியேயில்லை
9 - நல்ல வருவீங்க .... இங்கு சட்டமும் அரசியல் அமைப்பும் யாருக்காக என்று எனக்கு புரியவில்லை ?\/ சட்டத்தின் முன் அனைவரும் சமமே ஆனால் நடப்பதோ வேறு.. இவர்களை கைது செய்து என்னவாக போகின்றது ?
10 -   ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையிலான, சட்டப் பிரிவுகளின்படி " - 66 கோடிக்கு சொத்து சேர்த்ததற்கு கூட இந்த அளவு தண்டனை கிடையாது... எல்லாம் கலி காலம்...
11 -  அப்படியா.? இப்ப பாருங்கடா.. 'முதல்வர் மம்மி நல்லா சௌக்கியமா இருக்காங்களாம்.. சொந்தமா மூச்சு விடுறாங்களாம்.. சொந்த குரல்ல பேசுறாங்களாம்.. அப்போலோ ஆஸ்பத்திரியில சும்மா அங்கிட்டும் இங்கிட்டும், இங்கிட்டும் அங்கிட்டும் ஓடியாடி விளையாடிகிட்டு இருக்காங்களாம்.. அவங்க பல்லாண்டுகள் சீரும் சிறப்புமா ஆரோக்கியமா வாழ்வாங்களாம்..' இப்போ புடிங்கடா பார்க்கலாம்.
12 -  ராமஜெயம் கொலையாளியை புடிக்க துப்பில்லை....ரயிலில் கொள்ளையான வங்கிப் பணத்தை பிடிக்க துப்பில்லை....இளவரசன் விஷ்ணுபிரியா, தலித்துக்களை  கொலை செய்யும் மாபாவிகளை பிடிக்க வக்கில்லை....வந்துட்டானுங்க......
13 - இப்போது நடப்பது தமிழகத்தின் அம்மாவின்  பொற்கால ஆட்சி. மக்கள் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கிறார்கள். ஐயோ நான் வதந்தி பரப்பிட்டேனே... போலீஸ் என்ன புடிச்சுட்டு போயிருமா ?
14- முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை யாருக்கும் தெரியாத நிலையில் , வதந்தி என்று  குறை  கூறுவதில் பதில் அர்த்தமே இல்லை  தினமலர் வாசகர்கள் கருத்துக்கள 

கருத்துகள் இல்லை: