திங்கள், 10 அக்டோபர், 2016

Haiti ஹைதி புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்துள்ளது.

புளோரிடா: கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு
வழியாக கடந்த வாரம் அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இந்நிலையில்,  இன்றைய நிலவரப்படி ஹைதி நாட்டை பந்தாடியது ஹரிகேன் மேத்யூ புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்துள்ளது. ஹைதியின் கிராண்ட் அன்சே பகுதியில் மட்டும் சுமார் 522 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அங்காங்கு குவித்து வைத்ததால் துருநாற்றம் வீசியது. இதனால் அவைகளை எரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்  maalaimalar.com

கருத்துகள் இல்லை: