மின்னம்பலம்,காம் : “சசிகலாவின்
கணவர் நடராஜனின் சகோதரி வனரோஜா, நேற்று இரவு உடல்நிலைக்குறைவால்
தஞ்சாவூரில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா
தஞ்சாவூர் போகிறார் என்ற செய்தி பரவியது. நேற்று இரவு இந்தத் தகவல்
தெரிந்ததும், சசிகலாவின் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு
வந்திருக்கிறார்கள்.
‘நாத்தனார் இறந்துபோனதற்கு போகாமல்
இருக்கக்கூடாது’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசிகலா
நீண்டநேரம் யோசித்துவிட்டு, ‘இப்போ இருக்கும் சூழ்நிலையில நான் அங்கே போனா
அது சரியாக இருக்காது. அதுவும் என்னைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு
இருக்காங்க. இந்த நேரத்துல, அங்கே நான் போனால் அவரோட (நடராஜன்) பேச
வேண்டியிருக்கும். அது இன்னும் சர்ச்சைகளை உண்டாக்கிடும். அதனால நான்
போகலை’ என்று சொல்லியிருக்கிறார். ‘சொல்றவங்க ஆயிரம் சொல்லிட்டுப்
போகட்டும். உங்களைப்பற்றி அம்மாவுக்குத் தெரியும். அதனால நீங்க போயிட்டு
வாங்க…’ என்று டாக்டர்.சிவகுமார் சொல்லியிருக்கிறார்.
ஆனால் யார் சொல்லியும் சசிகலா சமாதானம் ஆகவில்லை. இரவு நீண்டநேரம் பேசியும், சசிகலா தஞ்சாவூர் போகவில்லை என்று முடிவாகியிருக்கிறது. அதன்பிறகுதான் சசிகலா சார்பில், இளவரசியின் மகன் விவேக் போவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மீடியாவுக்குத் தெரியாது. சசிகலா மருத்துவமனையில் இருந்து கிளம்புவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் அவர் வெளியே வரவேயில்லை.
காலையில் காரில் கிளம்பி, தஞ்சாவூர் போயிருக்கிறார் விவேக். மதியம் 12.40 மணியளவில் துக்க வீட்டுக்குப் போயிருக்கிறார். இறந்துபோன வனரோஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய விவேக், அதன்பிறகு நடராஜன் அருகே போயிருக்கிறார். நடராஜன் கைகளைப் பற்றிய விவேக் அவரிடம் ஏதோ பேசியிருக்கிறார். அப்போது, அங்கிருந்த மீடியா ஆட்கள் படம் எடுக்க… அவர்களை போட்டோ எடுக்கக் கூடாது என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டனர். அதன்பிறகு, நீண்டநேரம் விவேக்கும் நடராஜனும் பேசியிருக்கிறார்கள்!’ என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
“என்ன பேசினார்கள் என்ற விபரம் எதுவும் தெரிந்ததா?’ என்ற கேள்வியைக் கேட்டது ஃபேஸ்புக்.
உடனே பதிலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “ம்… விசாரித்தேன். ‘எங்கே உங்க அத்தை வரலையா?’ என்று கேட்டிருக்கிறார் நடராஜன். அதற்கு விவேக், ‘அவங்களுக்கு வரணும்னு ஆசைதான். ஆனால் இப்போ சூழ்நிலை சரியில்லை. சசிகலா புஷ்பா கொடுத்த பேட்டியை நீங்க பார்த்திருப்பீங்க. அதுல அத்தை பற்றித்தான் புகார் சொல்லியிருக்காங்க. இப்போ, இங்கே அத்தை வந்து உங்களோடு பேசினால், அது வேறமாதிரி பரவிடும். அப்புறம் அடுத்த முதல்வர் நீங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான் அத்தை வரலை… உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க!’ என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு முதல்வரின் உடல்நிலை பற்றி நடராஜன் விசாரித்திருக்கிறார். ‘நான் அங்கே வந்தாலும் அது உங்க அத்தைக்குத்தான் சிக்கலாகும். அதனாலதான் நான் வரலை. நான் கேட்டதாகச் சொல்லு தம்பி’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் விவேக்.
‘நான் அத்தைக்கு போன் பண்ணித் தர்றேன் பேசுங்க மாமா!’ என்று விவேக் சொன்னாராம். ‘இல்ல.. இப்போ வேண்டாம். இந்தக் காரியம் எல்லாம் முடியட்டும். நான் பேசுறேன். அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க…’ என்று அக்கறையுடன் சொன்னாராம் நடராஜன். வனரோஜா உடலை அடக்கம் செய்யும்வரை நடராஜன் கூடவே இருந்துவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறார் விவேக். துக்க வீட்டில் இருந்து வெளியேவந்ததும் அங்கே நடந்தவற்றை அத்தையிடம் அப்டேட் செய்திருக்கிறார் விவேக்’’ என்ற பதில் மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப்லைனில் போனது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக