அமராவதி:
கறுப்புப் பணத்தை தாமாக முன் வந்து தெரிவிக்கும் திட்டத்தில், ஐதராபாத்தை
சேர்ந்த ஒருவர், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு காண்பித்துள்ளது
தொடர்பாக, ஆந்திர முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கடும்
மோதல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டில்
பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவித்து, அபராதம்
செலுத்தி, உரிமையாக்கிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்தில், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவந்துள்ளதாக
தெரிவிக் கப்பட்டது.இதில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்
மட்டுமே, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கணக்கை காண்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், 'ஒரு தொழிலதிபரால் கூட இந்த அளவுக்கு கணக்கு காட்டியிருக்க முடியாது. ஊழல்வாதிகளுக் கும், கறுப்புப் பணத்தை பதுக்கு வோருக்கும் பாது காப்பான இடமாக அரசியல் மாறிவிட்டது' என்று, சந்திரபாபு கூறியிருந்தார்.
ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குறித்தே, அவர் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியாகின.இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கறுப்புப் பணம் தொடர்பான தகவல்கள் ரகசிய மாக வைத்திருக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. ஆனால், கறுப்புப் பணம் குறித்து, முதல்வர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஒன்று, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதால், அவருக்கு இந்த தகவல் கிடைத் ததா அல்லது அவருடைய பினாமி தான் இந்த கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருந்தாரா என்பது குறித்துவிசாரிக்க வேண்டும்.
மேலும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யிலான அரசின் ஊழல், மோசடிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.இதன் மூலம், மாநில அரசியல் பிரச்னை, தற்போது பிரதமர் மோடி வரை, பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. தினமலர்,காம்

அதில், அவர் கூறியுள்ளதாவது:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக