‘உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதுடன், அந்த இடங்களிலும் திமுக-வினர் மனு தாக்கல் செய்தார்களே?’
‘உள்ளாட்சியில் சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்குக் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும். இத்தனை இடங்களை பிரித்துக் கொள்வதற்கு தலைவர்கள் மட்டும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. எனவே, இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்கியது. சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், தொகுதிக்கு தலா ஒரு வார்டு என்ற அடிப்படையில் 22 வார்டுகள் கேட்டோம். அவர்கள் 14 கொடுத்தனர். பேச்சு வார்த்தை சுமூகமாக எட்டப்படாத இடங்களில் காங்கிரஸ், திமுக என இரு தரப்புமே வேட்புமனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுக-வுடன் பேசுவோம்’.
‘சென்னை வந்த ராகுல் காந்தி, திமுக தலைவரைச் சந்தித்திருக்கலாமே?’
‘ராகுல் காந்தியின் பயணம் அரசியல் சார்பின்றி முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாகவே இருந்தது. உடல்நலம் சரியில்லாத முதல்வரை பார்க்க வரும்போது அரசியல் கூடாது என்று அவர் கூறினார். அதனால்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் விமான நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வரவில்லை. தமிழக தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே சென்றேன். முதல்வரை பார்த்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்தால், அது அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்றே அவர் தவிர்த்தார்’.
‘பொறுப்பு முதல்வர் வேண்டும் என்று மு.க.ஸ்டாலினின் கருத்தில் இருந்து நீங்கள் மாறுபடுகிறீர்களே?’
‘நான் வேறு கட்சி. அவர் வேறு கட்சி. நாங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் ஒரே கருத்தை சொல்ல வேண்டுமா என்ன? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அடிப்படையில் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதே, நேரத்தில் நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்’.
‘திமுக காங்கிரஸ் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்று உறுதியாக கூறுகிறீர்களா?’
‘இன்றைய நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில், எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி கிடையாது. ஏனென்றால், முன்பு திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். பின்னர், கூட்டணி இல்லாமல் இருந்திருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அவ்வளவுதான்’. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
திருநாவுக்கரசர் நேரடியாக திமுகவோடு முரண்டு பிடிக்கும் இந்த கருத்தியல் போக்கை காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் எந்த துணிச்சலில் திருநாவுக்கரசர் இப்படி பேசுகிறார் என்ற கேள்விக்கு ‘திருநாவுக்கரசர் சசிகலா நடராஜனை ரகசியமாகப் போய் சந்தித்தார். அந்த சந்திப்பின் அடிப்படையிலும் அவர் கொடுத்த யோசனையின் அடிப்படையிலும் தான் திருநாவுக்கரசர், ராகுல் காந்தியை அவசரமாகச் சென்னைக்கு அழைத்து அப்பல்லோவில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தார். இப்போது இப்படி எல்லாம் பேசுவதும் சசிகலா நடராஜன் கொடுத்த ஐடியாவில்தான்’ என்கிறார்கள் திமுக-வினர். மின்னம்பலம்,கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக