வியாழன், 13 அக்டோபர், 2016

ராமர் உருவ பொம்மைகளை எரித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது!

இராவண லீலா நடத்திய தோழர்களை கைது செய்ததை கண்டிக்கிறோம் ! தோழர்களை உடனே விடுதலை செய் ! வழக்குகளை வாபஸ் வாங்கு ! இராம லீலா நடத்தி ராவணனை கொளுத்துபவனுக்கு ராணுவ பாதுகாப்பு, அயோக்கியன், குடிகாரன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தற்கொலை செய்ய காரணமானவன்,ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து செத்து போன ராமனை கொளுத்தினால் சிறையா?
​ராமர் உருவ பொம்மைகளை எரித்தவர்கள் கைது! சென்னை ராயப்பேட்டையில் ராமர், சீதை உருவ பொம்மைகளை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின்போது ராம லீலா எனும் பெயரில் திராவிட மன்னர் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது திராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.< அப்போது ராமர், சீதை மற்றும் லட்சுமணன் உருவ பொம்மைகளை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலமுருகன், ஜெயகுமார், கணேஷ், தீபன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.    ://ns7.tv/ta  
இராவண லீலா
நடத்திய தோழர்களை கைது செய்ததை கண்டிக்கிறோம் !
தோழர்களை உடனே விடுதலை செய் !
வழக்குகளை வாபஸ் வாங்கு !
இராம லீலா நடத்தி ராவணனை கொளுத்துபவனுக்கு ராணுவ பாதுகாப்பு,
அயோக்கியன், குடிகாரன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தற்கொலை செய்ய காரணமானவன்,ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து செத்து போன ராமனை கொளுத்தினால் சிறையா?
வன்மையாக கண்டிக்கிறோம் !
மதவெறியை தூண்டி மனிதர்களை உயிருடன் கொளுத்துபனுக்கு காவல்துறை பாதுகாப்பு !
அயோக்கியன் ராமனின் பொம்மையை எரித்தால் சிறையா?
தோழர்களை உடனே விடுதலை செய் !
.......
சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 01, 10 1998 ஆம் ஆண்டு கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது பதினெட்டு ஆண்டுகள் கழித்து 12, 10 , 2016 இன்று தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் ச குமரன் தலமையில் புதுவை மாநில தலைவர் வீரமோகன் முன்னிலையில் சென்னை மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் அறிஞர் அண்ணா அவர்கள் சிலை அருகில் இராமன் சீதை இலட்சுமணன் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது உருவ பொம்மையை கழக தோழர் செல்வம் தலமையில 300 க்கு மேல் காவலர்கள் குவித்து இருந்தும் காவல்துறை யின் அடக்குமுறையை மீறி இராமன் சீதை இலட்சுமணன் உருவ பொம்மையை எரித்தார்கள் உருவ பொம்மை எரித்தவர்களை மைலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 11 தோழர்கள் சென்னை புழல் சிறைச்சாலை அடைத்தார்கள் குமரன் புதுவை வீரமோகன் சுரேஸ் இளங்கோ .மதுரை மாவட்ட கழக தலைவர் தமிழ் பித்தன் தோழியர் வெண்மணி திருவள்ளுர் மாவட்ட தலைவர் தமிழ் சிற்பி நாகராஜ் மற்றும் மறைந்த சைதை கழக தோழர் விஜயகுமார் அவர்களின் மகன் மகள் விஜயகுமாரின் சகோதரி விஜயலெட்சுமி மற்றும் கழக தோழர்கள் 41 பேர்கள் இராயப்பேட்டை யில் உள்ள நல்வாழ்வு திருமண மண்டவத்தில் வைத்து இரவு 11 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்

கருத்துகள் இல்லை: