செவ்வாய், 11 அக்டோபர், 2016

அரியானாவின் திறந்தவெளி சிறைச்சாலை அம்பாலாவில் அமைக்கப்படுகிறது

அம்பாலா அரியானாவில் சிறை கைதிகளுக்கான முதல் திறந்தவெளி
சிறைச்சாலை அம்பாலா நகரில் உருவாக்கப்படுகிறது. அதில் கைதிகள் சுதந்திரம் ஆன முறையில் தங்க முடியும். இதுபற்றி சிறை துறை இயக்குநர் யாஷ்பல் சிங்கால் இன்று கூறும்பொழுது, மாநிலத்தின் முதல் திறந்தவெளி சிறைச்சாலைக்கான திட்ட வடிவம் இறுதி செய்யப்பட்டு விட்டது. அது மற்ற மாநிலங்களில் இருக்கும் திறந்தவெளி சிறைச்சாலைகளில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும்.அங்கு குறைந்த அளவு பாதுகாவலர்கள் இருந்திடுவார்கள்.  இந்த திறந்தவெளி சிறைகளில் நல்ல நடத்தையை கொண்டவர்கள் தங்க வைக்கப்படுவர்.  இங்கு வரும் கைதிகள் சுதந்திரம் ஆன முறையில் தங்கிடலாம் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


அரியானாவின் சிறைச்சாலைகளில் செல்போன்கள் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனை அடுத்து ஜாமர் கருவிகள் சிறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.  சோன்பேட் மற்றும் ரோக்தக் உள்ளிட்ட 3 சிறைகளில் ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கான பணிகள் கூடிய சீக்கிரம் தொடங்கப்படும் என்றும் அதற்கான பணியை சிறை துறை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: