செவ்வாய், 11 அக்டோபர், 2016

ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

துபாயிலுள்ள JW மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், அந்த D 5 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. இந்த ஏலத்தில் பங்கு கொண்ட துபாய் வாழ் இந்திய தொழிலதிபரான பல்விந்தர் சஹானி, அந்த நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திராம்ஸ் விலைக்கு கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.அங்கு குழுமியிருந்த அரபு ஷேக்குகளே இந்த விலையை கேட்டு அதிர்ந்தனர். இந்த விலையை விட அதிகம் கொடுக்க யாரும் தயாராக இல்லை.பல்விந்தர் சஹானியிடம் இருக்கும் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. அதில், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இந்த D 5 என்ற பேன்ஸி நம்பரை பதிவு செய்ய அவர் முடிவு செய்திருக்கிறாராம்.


கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: