சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண
அரசியல் தலைவர்கள் இந்தியா முழுக்க இருந்து வந்தாலும் இதுவரை அவரை யாரும்
பார்க்கவில்லை. ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம்,
தமிழக கவர்னர் என யாராலும் ஜெயலலிதாவைக் காண முடியவில்லை. அதற்கு அப்பல்லோ
நிர்வாகம் சொன்ன காரணம் நோய்த்தொற்று இருப்பதால் நேரில் பார்க்க முடியாது
என்று சொன்னது. இந்நிலையில்தான், நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும்,
நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நேற்று அப்பல்லோ வந்தார்கள்.
மருத்துவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தவர்கள், ஜெயலலிதாவின் மருத்துவ
அறிக்கைகள், பரிசோதனைகள், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என சுமார் 20
நிமிடங்கள் அதுபற்றி விரிவாக விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள்.
பின்னர், ஜெயலலிதா இருக்கும் அவசர சிகிச்சை அறைக்கு வெளியே நின்று அவரது நிலைமையைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் உள்ளே சென்றபோது அங்கு ஊடகவியலாளர்கள் குவிந்திருந்தார்கள். திரும்பி வரும்போது அதைவிட பெருங்கூட்டம் குழுமியிருந்தநிலையில், வேகமாக இறங்கிவந்தவர்கள் தங்கள் காரில் ஏறி நிற்காமல் சென்றுவிட்டார்கள். நேராக டெல்லி சென்றவர்கள், தங்களுக்கு வேண்டிய சில மூத்த ஊடகவியலாளர்களிடம் சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்கள். பின்னர் பிரதமரைச் சந்தித்த ஜெட்லியும், அமித் ஷாவும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினார்கள். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அப்பல்லோ மருத்துவமனைக்கு வர திட்டமிட்டுள்ளார். அவர் நாளை மறுநாள் (15ஆம் தேதி) கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்கிறார். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டுக்காக கோவா செல்லும் மோடி, சென்னை வந்து அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிகிச்சைகள் தொடர்பாக விசாரித்துவிட்டு இங்கிருந்து கோவா செல்வார். மீன்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக