காலையில்
பேட்டியளித்த சசிகலா புஷ்பா, தமிழக ஆளுநர் வித்யாசாகர்
ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழக முதல்வரின் கையெழுத்தை மோசடியாக வேறொருவர் போட வாய்ப்பிருப்பதாகவும் அதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி கைமாறலாம் என்றும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழாக்கம்:மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு....
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அவரைச் சூழ்ந்திருக்கும் சிலர் அவருடைய கையொப்பத்தை மோசடியாக இட்டு அதிமுக-வின் துணை பொதுச்செயலாளரை நியமிக்கவும், அதன்மூலம் ஆட்சியை நடத்தவும் வாய்ப்பிருப்பதாக நான் அஞ்சுகிறேன். எனவே, தமிழக முதல்வரிடமிருந்து அரசு தொடர்பாக கடிதங்கள் ஏதேனும் வந்திருந்தால் அதில் இடப்பட்டிருக்கும் கையொப்பம் முதல்வரின் கையொப்பம்தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.
தமிழக அரசிடமிருந்து வரும் அனைத்துக் கடிதங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் கையொப்பம் அவருடையதுதானா என்பதை மிகுந்த கவனத்தோடு உறுதிப்படுத்திக் கொள்ளவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக