தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
முதல்வர் ஜெயலலிதா குணம் பெற்று மீண்டும் தனது முதல்வர் பணியை தொடர வேண்டும் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் கோவில் கோவிலாக முதல்வர் ஜெயலலிதா குணம் பெற வழிபாடு நடத்துகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.
இந்நிலையில் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சாமி. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபத்தான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதற்கு சசிகலா கையெழுத்திட்டதாகவும் கூறிய அவர், கையெழுத்திட அவர் யார்? என்ன உறவு முறை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். வெப்துனியா.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக