தமிழ்நாடு
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல்
நேர்முக உதவியாளர் சத்தியா என்கிற சத்தியநாராயணா விபச்சார வழக்கில்
பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.;கர்நாடக
மாநிலம் பெங்களூருவில் பானசவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100அடி
சாலையில் தனியார் வணிக வளாகத்தில் பால்ஜி கவுடா என்பவருக்கு சொந்தமான
ஹாப்பி எண்டிங் என்ற பெயரில் பாடி டூ பாடி மசாஜ் செண்டர் என்ற ஒரு அழகு
நிலையம் உள்ளது. இந்த மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடப்பதாக
குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்
அடிப்படையில் அந்த தங்கும் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, பல
மாநிலங்களை சேர்ந்த பெண்களை வேலை தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல்
தொழிலில் ஈடுபடுத்தியது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான்கு பெண்களை மீட்டனர்.அவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாடு கால்நடை துறை அமைச்சரின் உதவியாளர் ஓசூர் பாகலூர் ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்னசாமியின் மகன் சத்யனாராயனா என்பவரும் ஒருவர். மேலும் இங்கிருந்து 17 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் உரிமையாளரான பாலாஜிகவுடா, மேலாளர் உமேஷ் மற்றும் இந்த தொழிலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் தலைமறைவாக உள்ளனர்.>பெண்களை கடத்தி, அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தின் பிரிவில் ( Crime No. 510/2016 u/s 3 4 5 & 7 PIT act. 370 IPC. ) சத்தியநாராயணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.சத்தியநாராயணா:நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக