வியாழன், 13 அக்டோபர், 2016

கட்சியினரை தக்க வைக்க விஜயகாந்த் கடைசி முயற்சி

கரைந்து வரும் கட்சியை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, மாநிலம்
முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்ததும், அதில் இருந்து தே.மு.தி.க., விலகியது; ஆனாலும், அக்கட்சியினரின் வெளியேற்றம் நிற்க வில்லை. உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை நிறுத்தியது; பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதிலும் அதிருப்தி ஏற்பட்டு, பலர் வெளியேறினர். தக்க வைக்க முயற்சி இந்நிலையில்,கட்சியினரை தக்க வைக்க, விஜய காந்த், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். முதல் கட்டமாக, காலியாக உள்ள, 18 மாவட்டங் களுக்கும் செயலர்களை நியமித்திருக்கிறார். அடுத்த கட்டமாக, உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் களை கூட்டி பேச உள்ளார்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது; யாரெல் லாம் வேட்பாளர்களாக விரும்பு கின்றனர்; தேர்தல் அறிவிப்பு வரும்போது, அதே ஆர்வத்துடன் போட்டி யிடத் தயாராக இருக்கின்ற னரா என்ற தகவல்களை தெரிந்து கொள்ள இருக்கிறார்.


தொண்டர்களை சந்திக்க திட்டம் இதற்காக, இன்று தேர்தல் பொறுப்பாளர்களை,  சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அழைத்துள்ளார்; அதைத் தொடர்ந்து, மாவட்ட செயலர்களை அழைத்து பேச உள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், கட்சியை காப்பாற்ற முடியும் என, விஜயகாந்த் நினைப்ப தாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர்
தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: