செவ்வாய், 11 அக்டோபர், 2016

கான்பூர் .. இணை நீதிபதி பிரதிபா கொலை .. கணவர் கைது ! கருக்கலைக்க மறுத்தால் மனைவியை கொன்றார்

கான்பூர், உத்தர பிரதேசத்தில் இணை நீதிபதி பதவி வகித்த 30 வயது நிறைந்த 3
மாத கர்ப்பிணி மனைவியை கருக்கலைப்பு செய்ய மறுத்ததற்காக கொலை செய்த கணவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சர்கியூட் ஹவுஸ் காலனியில் கணவர் மனு அபிஷேக் உடன் வசித்து வந்தவர் பிரதீபா கவுதம்; இவர் கான்பூர் (கிராமம்) நகரில் இணை நீதிபதி பணியில் இருந்துள்ளார். இந்த வருடம் ஜனவரியில் இரு குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக இவர்களது திருமணம் நடந்துள்ளது.; கவுதம் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து கணவர் அபிஷேக் கான்பூர் வந்துள்ளார்.  அங்கு தனது மனைவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் என போலீசில் கூறியுள்ளார்.


கவுதமின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.  அவரது கைகள் மற்றும் கால்களில் காயத்திற்கான அடையாளங்கள் இருந்துள்ளன.  அவர் தடியால் அடிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.  அவரை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு பின்னர் மின் விசிறியில் தொங்க விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகள் வழியே போலீசாரால் அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.  அவரது பெற்றோர் மற்றும் கவுதமின் வீட்டு பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.  கர்ப்பிணியான மனைவியை கருக்கலைப்பு செய்யும்படி அபிஷேக் கூறி வந்துள்ளார்.  அதற்கு அவர் மறுத்துள்ளார்.  இதனால் சமீபத்தில் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.

அபிஷேக் போலீசாரிடம் கூறும்பொழுது, கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்ற கவுதம் அதன்பின் கான்பூருக்கு திரும்பியுள்ளார்.  ஆனால் கவுதமிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை.  அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் டெல்லியில் இருந்து கான்பூர் சென்றேன்.  அங்கு வீட்டில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது என கூறியுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: